sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

வெற்றிக் கதை கேளு - சக்சஸ் மந்திரம் சொல்லும் ராமலட்சுமி

/

வெற்றிக் கதை கேளு - சக்சஸ் மந்திரம் சொல்லும் ராமலட்சுமி

வெற்றிக் கதை கேளு - சக்சஸ் மந்திரம் சொல்லும் ராமலட்சுமி

வெற்றிக் கதை கேளு - சக்சஸ் மந்திரம் சொல்லும் ராமலட்சுமி

1


ADDED : டிச 08, 2024 10:26 AM

Google News

ADDED : டிச 08, 2024 10:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாற்றி யோசித்து அந்த சிந்தனைக்கு 'முயற்சி' என்ற உரமிட்டால் போதும் எங்கும், எந்த சூழலிலும் சாதனை என்ற செடி மலர்ந்து மரமாகி பயன் தரும் என்பதில் மாற்றம் இல்லை என்கிறார், பெண் தொழில்முனைவோராக சாதிக்கும் மதுரையை சேர்ந்த ராமலட்சுமி.

இவர் நடத்தும் 'ஹோம் சேல் பொட்டிக்' தொழிலுடன், தொழில்முனைவோராக விரும்பும் இளம் பெண்களுக்கு கை கொடுக்கும் வகையில் தன் சக்சஸ் மந்திரத்தையும் இலவசமாக ஆன்லைனில் கற்றுத்தரும் இவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...

படித்தது எம்.ஏ., எம்.பில்., அரசு பணிக்கு செல்ல பெற்றோர் ஆசைப்பட்ட போதும் எனக்கு பிசினஸில் சாதிக்கவே ஆசையாக இருந்தது. ஆனாலும் குடும்பம், குழந்தை என வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கும் வாழ்க்கை தான் அமைந்தது. என் மனதில் தகித்த 'பிசினஸ்' என்ற ஆர்வத்தை கணவர் தெரிந்து சுதந்திரம் கொடுத்தார். அப்போது சிறிய அளவில் துவங்கியது தான் 'ஹோம் சேல் பொட்டிக்'.

ஆனால் மாற்றி யோசிக்கும் சிந்தனையால் சிறிய பிசினஸ் என்றாலும் மும்பை, ஆமதாபாத் சென்று, தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தே 'பர்சேஸ்' செய்யும் முடிவு தான் எனக்கு கை கொடுத்தது. ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் வித்தியாசம், தரமான கலெக் ஷன்கள் ஆன்லைன் ஆர்டர் போன்ற முயற்சிகள் கை கொடுத்தன. இன்று ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் தரும் தொழிலாக மாற்றியுள்ளேன். நான் நடத்தும் யுடியூப் வழியே வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கின்றன.

இந்த வெற்றிக்கு பின்னணி, எனக்குள் இருந்த 'பெண்' என்ற தயக்கத்தை துாக்கியெறிந்தது தான்! தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண்கள், என்போல் வெற்றியாளராக வேண்டும் என்பதற்காக நான் கடந்து வந்த பாதையை ஆன்லைனில் இலவசமாக சொல்லி கொடுக்கிறேன். இளம்பெண்கள் ஆர்வத்துடன் இணைகின்றனர். அதனை பின்தொடர்ந்து பலர் சாதித்து வருகின்றனர். சக்சஸ் மந்திரத்தை பகிர்வதால் எனக்கு மனதிருப்தி கிடைக்கிறது என்கிறார் இவர்.

இவரை 87785 06979ல் தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us