sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

என்னை கவர்ந்த மாதவியின் 'குடம் ஆட்டம்': நடனக்கலைஞர் ராஜேஸ்வரி

/

என்னை கவர்ந்த மாதவியின் 'குடம் ஆட்டம்': நடனக்கலைஞர் ராஜேஸ்வரி

என்னை கவர்ந்த மாதவியின் 'குடம் ஆட்டம்': நடனக்கலைஞர் ராஜேஸ்வரி

என்னை கவர்ந்த மாதவியின் 'குடம் ஆட்டம்': நடனக்கலைஞர் ராஜேஸ்வரி


ADDED : டிச 15, 2024 11:17 AM

Google News

ADDED : டிச 15, 2024 11:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலப்பதிகாரத்தில் நடனத்தாரகையாக வரும் மாதவி குடம் ஆட்டம், குடை ஆட்டம் உட்பட 11 வகை ஆட்டங்களில் தேர்ந்தவராக இருப்பார். மேடைகளில் மேற்கத்திய நடனமாடி கைத்தட்டல் வாங்கினாலும் மாதவி ஆடிய பரதத்தில் குடம் ஆட்ட நடனத்தை கற்று வருகிறேன் என்கிறார் மதுரையைச் சேர்ந்த இளம் நடனக்கலைஞர் ராஜேஸ்வரி.

வெஸ்டர்ன், செமி கிளாசிக்கல் நடனத்தை கற்றுத்தருகிறேன். ஆனால் எனது நடன அசைவு தாய் லட்சுமியிடம் இருந்து கிடைத்த பொக்கிஷம் என்று நடன அனுபவங்களை விளக்கினார்.

அம்மா லட்சுமி பள்ளி ஆசிரியராக இருந்தாலும் ப்ரீஸ்டைல் கிராமிய நடனக் கலைஞர். ஒயிலாட்டம், கும்மியாட்டம், கிராமிய நடனத்தில் அவரை தோற்கடிப்பது சிரமம். அண்ணனும் நடனமாடுவார். அதனால் சிறுவயதிலிருந்தே நடனம் என்னை தொற்றிக் கொண்டது.

கல்லுாரியில் படிக்கும் போது தான் நடனத்தை தொழில்முறை விருப்பமாக தேர்வு செய்தேன். சீனியர்கள் மனோகரன், மேடி நடனம் கற்றுத்தந்தனர். அடுத்தடுத்து சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்க வெஸ்டர்ன் நடனத்தை முழுமையாக கற்றுக் கொண்டு நடன இயக்குனர் ஆனேன். இதுவரை 23 மாஸ்டர்களிடம் பயிற்சி பெற்று ஒவ்வொருவரிடமும் உள்ள ஸ்டைல்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு லாக்கிங், ஹிப்பாப், பிரேக்கிங், லிரிக்கல், கண்டெம்பரரி, சினிமாடிக் ஸ்டைல்களில் நடனம் கற்றுத் தருகிறேன். திருமண விழாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய பொருள் அறிமுக நிகழ்வு, ஷாப்பிங் மால்கள், ேஷா க்களில் குழுவாக சேர்ந்து நடனமாடுகிறேன்.

திருமண விழாவிற்கு நடனமாட செல்லும் போது அவர்கள் மூலம் மற்றவர்களிடம் இருந்து ஆர்டர்கள் கிடைக்கிறது. எங்களுடன் சேர்ந்து மணமக்களும் ஆட விரும்பினால் திருமணத்திற்கு 3 நாட்கள் முன்பாக அவர்கள் இருக்கும் இடத்திற்கோ எங்கள் இடத்திற்கோ வரவழைத்து பயிற்சி தருவோம். அவர்கள் நடனப்பயிற்சி பெறாவிட்டாலும் மணமக்களை முன்னிலைப்படுத்தி வியர்க்காத வகையில் அதிக அசைவுகளின்றி நடனமாட வைப்போம்.

இருவீட்டு உறவினர்களையும் மேடைக்கு அழைத்து லேசான அசைவுகளுடன் நடனமாட வைக்கும் போது எல்லோருக்கும் சந்தோஷம் ஒட்டி கொள்ளும்.

பர்த்டே பார்ட்டிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைக்கிறது. பிறந்தநாள் கொண்டாடும் நபர் ரோட்டில் நடந்து செல்லும் போது திடீரென கேக் கொடுத்து வெட்டச் செய்து பர்த்டே 'சர்ப்ரைஸ்' செய்வதுண்டு. ஓட்டல்களில் சாப்பிட அமரும் தம்பதியரை இதேபோல நடனமாடி ஆச்சர்யப்படுத்துகிறோம்.

திருமண மேடைகளில் 95 சதவீதம் சினிமாட்டிக் ஸ்டைல் தான் கற்றுத் தருவோம். வெஸ்டர்ன் ஸ்டைலை பார்த்தவுடன் உடனே பழகி கூடவே ஆட முடியாது. முறையான பயிற்சி இருந்தால் குண்டோ, ஒல்லியோ யாராக இருந்தாலும் ஆடலாம். சினிமாட்டிக் ஸ்டைல் நடனமாட பயிற்சி தேவையில்லை. மேடையிலேயே லேசான அசைவுகளை தரும் போது உடனடியாக அதே போல ஆட முடியும். மேடையில் ஆடி முடித்தவுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி தொடங்கும் போது கீழே வந்து குட்டீஸ்களை அழைத்து நடனமாடுவோம். பள்ளிகள் விரும்பினால் 3 மாதங்களுக்கு என கட்டணம் நிர்ணயித்து மாணவர்களுக்கு வெஸ்டர்ன் நடனம் கற்றுத் தருகிறேன்.

மதுரையில் 2018ல் 100 சதவீத ஓட்டளிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காளவாசல், கீழவாசல், ஐயர் பங்களா உட்பட 8 சிக்னல் உள்ள இடங்களில் நடனமாடியுள்ளோம். கடந்தாண்டு கோவையில் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு நடனமாடினோம்.

அலுவலக வேலை போல ஒரே இடத்தில் எங்களால் வேலை செய்ய முடியாது. இதுவே என்னை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது. புதுப்புது மனிதர்களை சந்திக்கும் போது அவர்களை ஆடவைத்து அழகுபார்க்கும் போது கூடுதல் சந்தோஷம் கிடைக்கிறது. நடனம் ஆடுவது தான் என்னை புதுப்பிக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் கணவர் பிரபு கார்த்திக்கின் ஒத்துழைப்பு தான்.

காய்ச்சல், தலைவலி என்றால் வீட்டில் துள்ளலான பாடலை போட்டு நடனமாடினால் எனக்கு சரியாகி விடும்.

தற்போது பரதத்தில் குடம் ஆட்டம் கற்றுக் கொண்டிருக்கிறேன். நடனக்கலைஞர் ஜாஸ்மின் தான் பரதத்திற்கு குரு. சிலப்பதிகார மாதவி ஆடிய 11 நடன வகையில் ஒன்று குடம் ஆட்டம். கரகத்தில் செம்பு வைத்து மண்ணை நிரப்பி மேலே கும்பம் வைத்து ஆடுவார்கள். பரதத்தின் குடம் ஆட்டத்தில் குடத்தின் முக்கால் அளவு அரிசியை நிரப்பி கீழே கொட்டாமல் நாட்டியம் ஆட வேண்டும். கால்களால் தாளம் தட்டி பரதமாட வேண்டும். தட்டும் போது அதிர்விலும் அரிசி கீழே சிந்தக்கூடாது. இந்த ஆட்டமுறை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

நடனம் என்னை சந்தோஷமாய் கரைசேர்க்கும் என்றார் ராஜேஸ்வரி.

மேலும் பேச 86374 73231.






      Dinamalar
      Follow us