/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
இன்றைய சினிமா எப்படி - சொல்கிறார் நடிகர் ஜோ மல்லூரி
/
இன்றைய சினிமா எப்படி - சொல்கிறார் நடிகர் ஜோ மல்லூரி
இன்றைய சினிமா எப்படி - சொல்கிறார் நடிகர் ஜோ மல்லூரி
இன்றைய சினிமா எப்படி - சொல்கிறார் நடிகர் ஜோ மல்லூரி
ADDED : பிப் 05, 2017 10:49 AM

நடிகர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர் ஜோ மல்லுாரி.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த இவர் 'கும்கி' சினிமாவில் கதாநாயகி லட்சுமி மேனனுக்கு தந்தையாக நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடிவந்தன.அதன்தொடர்ச்சியாக ரம்மி, ஜில்லா, அஞ்சான், புலி, ஜன்னல் ஓரம், மொசக்குட்டி, காக்கா முட்டை போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் அளித்த பேட்டி,* உங்கள் நடிப்பு அனுபவம்...பாடல் எழுத வாய்ப்பு கேட்டு இயக்குனர் சாலமன்பிரபுவை அணுகியபோது, அவர் 'கும்கி'யில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.* நடித்ததில் பிடித்தது...மூன்றாண்டுகளில் 23 படங்கள் வரை நடித்துள்ளேன். இதில் தமிழ்படங்களே அதிகம். அனைத்தும் பிடிக்கும்.* பிறமொழி பட வாய்ப்பு...தற்போது பெயர் சூட்டாத தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.* வில்லன் 'கேரக்டர்' பற்றி...ஆருத்ரா, சைனா படங்களில் வில்லன் 'கேரக்டரில்' நடித்துள்ளேன். இது புது அனுபவம். இதற்கு பல 'கெட்டப்' தேவைப்படுவதால் 'பாடி லாங்குவேஜ்'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.* நடிக்க வராவிட்டால்...எழுத்தாளர் அல்லது பாடகராகி இருப்பேன். பேச்சாளர் வலம்புரிஜான், இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரிடம் பணியாற்றி உள்ளேன்.* எழுத்துப்பணி எப்படி...'விலை மகளின் நாட்குறிப்பு' என்ற நுால் எழுதி உள்ளேன். எட்டு ஆண்டுகளாக 'தமிழாரம்' என்ற நுாலை எழுதி வருகிறேன். விரைவில் வெளியிடப்பட உள்ளது.* விருது கனவு குறித்து...நடிப்பில் தேசிய விருது பெற்று, சர்வதேச அளவில் இந்திய நடிகராகவும் பேசப்பட வேண்டும் என்பதே லட்சியம். 'கும்கி'யில் நடித்ததை பாராட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.* பிடித்த நடிகர், நடிகை ...மோகன்லால், ராதிகா* இன்றைய சினிமாவின் நிலை...எடுப்பது எளிது, வெளியிடுவது கடினம். வாழ்த்த 99525 11200.