தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ துாரிகை படைத்த கடவுள் ஓவியங்கள்

 துாரிகை படைத்த கடவுள் ஓவியங்கள்

 துாரிகை படைத்த கடவுள் ஓவியங்கள்


ADDED : நவ 30, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆய கலைகள் அறுபத்து நான்கு. அதில் மக்களை எளிதில் கவரும் கலைகளுள் ஓவியமும் ஒன்று. ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் அல்லவா? பல்வேறு கலைஞர்கள் ஓவியத்தில் கோலோச்சுகின்றனர். அவ்வகையில் தனியார் பள்ளி ஆசிரியரான, திருப்பூர், முருகம்பாளையத்தை சேர்ந்த மோகன் பிரபு,

தன் ஓவியப்பயணத்தை நம்முடன் வரைகிறார்...

ஆசிரியராக பணியாற்றுவது வாழ்வில் பெருமையாகவும், மாணவர்களுக்கு அறிவை பகிர்வது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறு வயது முதல் அதிக ஆன்மிக ஆர்வம் கொண்ட நான், அடிக்கடி கோவிலுக்கு செல்வேன். அங்குள்ள கடவுள் சிலைகளும் சுவர் ஓவியங்களும் ஓவியத்தின் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தின; ஓவியம் எனக்கு பிடித்துப் போனது. சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு இருந்தது.

ஆர்டர்கள் வருகின்றன

ஆரம்பத்தில் மனத்திற்கு பிடித்ததை வரைந்தேன். பின், என் படைப்புகள் இணையத்தில் பகிரத் தொடங்கினேன். பலரிடமிருந்தும் நன்றியுடனான பாராட்டுகள் கிடைத்தன. என் ஓவியங்களை விரும்பி, மக்கள் என்னிடம் வரைந்து தரும்படி ஆர்டர் செய்கின்றனர். இதனால் எனக்கு மேலும் ஊக்கம் கிடைத்தது. இன்று, வரைதல் என் வாழ்க்கையின் ஒரு பிரிவு மட்டுமல்லாது, இதயத்தின் ஒரு பகுதியாகிவிட்டது.

கனவின் கருவி ஓவியம்

ஆசிரியராகப் பணிபுரிவதோடு ஓவியங்கள் வழியாக என் கனவுகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் மேலும் பல புதிய படைப்புகளை உருவாக்கி, எனது திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்துவது என் நோக்கம்.

--

மோகன் பிரபு

மோகன் பிரபு வரைந்த கடவுள் ஓவியங்கள்

வாய்ப்பை பயன்படுத்துங்கள் இன்றைய காலத்தில் பலருக்கு பல திறமைகள் இருந்தாலும் சில சூழ்நிலைகள் காரணமாக அவற்றை அவர்கள் தங்களுக்குள்ளேயே மறைத்து வைக்கிறார்கள். நான் அனைவரிடமும் சொல்ல விரும்புவது ஒன்றே. நமக்கெல்லாம் பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சரியான நேரத்திலும், சரியான இடத்திலும் பயன்படுத்துவது தான் வெற்றியின் ரகசியம். - மோகன் பிரபு, ஓவியர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us