தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/இன்று முதல் மறுபடியும் நாடகம் பார்க்கலாம்...ரசிக்கலாம்!

இன்று முதல் மறுபடியும் நாடகம் பார்க்கலாம்...ரசிக்கலாம்!

இன்று முதல் மறுபடியும் நாடகம் பார்க்கலாம்...ரசிக்கலாம்!


UPDATED : ஆக 30, 2026 07:53 AM

ADDED : ஆக 29, 2026 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 07:53 AM ADDED : ஆக 29, 2026 01:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் 1960 முதல் 1980 ம் ஆண்டு வரை பல அமச்சூர் நாடக குழுக்கள் நாடகங்களை அரங்கேற்றி வந்தன.

அன்றைக்கு பிரபலமாக இருந்த சண்முகா தியேட்டர், சாமி தியேட்டர், வெரைட்டிஹால் மற்றும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கங்களில் பல மேடை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

நாடக இயக்குனர் கே.ஆர்.எஸ்.கிருஷ்ணன் நடத்திய, 'கோவை கே.ஆர்.எஸ். நாடகக்குழு' சிறப்பாக இயங்கியது.

இந்த குழு 50க்கு மேற்பட்ட சிறந்த நாடகங்களை தயாரித்து, 2000 -க்கும் மேற்பட்ட காட்சிகளை நடத்தியது.

சினிமாவின் வளர்ச்சியால், 1980க்கு பிறகு அமெச்சூர் நாடகங்கள் அழிந்தன. 2000 க்கு பிறகு அவ்வப்போது சிலர் ஆர்வத்தில் நாடகங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கோவையில் மீண்டும் மேடை நாடகங்களுக்கு புத்துயிர் தரும் வகையில், ஸ்ரீமாருதி கான சபா மற்றும் மித்ரா கிரியேஷன்ஸ் இணைந்து, நாடக விழாவை நடத்துகின்றன.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த நாடக விழாவில், ஆர்.எம்.கோபாலகிருஷ்ணன் நடிக்கும் 'சனீஸ்வரன்', மற்றும் 'காரைக்கால் அம்மையார்' வரலாற்று நாடகங்கள், கோவை கலாலயம் வழங்கும் 'கண்ணான கண்ணா' சமூக நாடகம் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த நாடகங்கள் இன்று(30), நாளை மற்றும் செப்., 1ம் தேதிகளில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீமாருதி கானசபாவில் மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.

'சனீஸ்வரன்', 'காரைக்கால் அம்மையார்' நாடகங்களில் நாயகராக நடிக்கும் நாடக கலைஞர் கலைமாமணி கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்...

''மனிதனின் ஒன்பது அவயங்கள்தான், ஒன்பது நவக்கிரகங்கள். அதில் சனீஸ்வரன் எந்த பகுதியில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதுதான் சனீஸ்வரன் நாடகம். இந்த நாடகத்தை 36 முறை அரங்கேற்றி நடித்து, 'ஐன்ஸ்டன் வேர்ல்ட் ரெக்கார்டில்' இடம் பெற்று இருக்கிறேன். மக்களுக்கு இறைவனிடம் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்வதுதான் இந்த நாடகத்தின் மூலம்,'' என்றார்.

நாடகக்கலையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கேட்டதற்கு, ''கலா ரசனை என்பது மனிதனின் உணர்வில் கலந்திருக்கும் ஒன்று. அது மக்களிடம் இருக்கும் வரை எந்த கலையும் அழியாது. நாடக கலையும் அப்படித்தான். மக்கள் ரசனையில் இருந்து எப்போதும் மறையாது,'' என்றார் அவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us