UPDATED : ஆக 16, 2026 09:21 AM
ADDED : ஆக 16, 2026 09:18 AM

சாதாரண பலுான் தான். ஆனால், அது கிடைக்க வேண்டிய ஆள் கையில் கிடைத்தால் வேறு விதமாக மாறும் என்பதை நிரூபிக்கிறார் பவித்ரா.
13 ஆண்டுகளாக 'பலுான் ஸ்கல்ப்ச்சர்' என்ற வித்தியாசமான கலையை செய்து வருகிறார் இவர்.
அதென்ன பலுான் ஸ்கல்ப்ச்சர்?
நீளமான பலுான்களை பயன்படுத்தி நாய், முயல், பூ, பட்டாம்பூச்சி, கிரீடம், வாள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், சூப்பர் ஹீரோக்கள், விலங்குகள் என எண்ணற்ற உருவங்களை கைகளால் திருப்பி, மடக்கி, இணைத்து உருவாக்கும் ஒரு தனித்துவமான கலைதான் அது.
![]() |
பார்க்க ஈசியாக தோன்றினாலும், இதற்குப் பொறுமை, துல்லியம், கற்பனைத் திறன் மற்றும் நல்ல பயிற்சி அவசியம் என்கிறார் பவித்ரா.
இவர் தனது மகளுக்காக வித்தியாசமான பலுான் உருவங்களை உருவாக்க ஆரம்பித்தார். இதைக்கண்ட நண்பர்கள், உறவினர்கள் பாராட்டியதோடு, நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க ஆரம்பித்தனர்.
![]() |
அதுவே இன்று ஒரு தனி அடையாளமாக மாறியுள்ளது.
''ஒரு குழந்தை நான் செய்த பலுான் உருவத்தைப் பார்த்து சிரிக்கும். அந்த நிமிடம்தான் எனக்கு மிகப்பெரிய விருது,'' என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
![]() |
''பல பெண்கள் படித்திருந்தாலும், குடும்பச் சூழல், பொருளாதாரப் பொறுப்பு காரணமாக வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். ஆனால் மனசுக்குள் இருக்கும் திறமையை மறந்துவிடக் கூடாது. நம் 'ஹாபி' கூட நாளை ஒரு வெற்றியை தரலாம்; துவங்க தைரியம் மட்டும் போதும்,'' என்கிறார்.
![]() |
ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறார் பவித்ரா.
தொடர்புக்கு: 99655 61455.




