தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/கடலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்: ஸ்கூபா டைவிங் மூலம் சிறுமியின் விழிப்புணர்வு

கடலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்: ஸ்கூபா டைவிங் மூலம் சிறுமியின் விழிப்புணர்வு

கடலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்: ஸ்கூபா டைவிங் மூலம் சிறுமியின் விழிப்புணர்வு


ADDED : ஏப் 28, 2024 11:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2024 11:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாரகை. 10 வயதில் முதல் இளம் வயது ஸ்கூபா டைவிங் வீராங்கனையாக உருவாகி வருகிறார்.அடுத்த மாதம் தான் இவருக்கு 10 வயதாகிறது. குறைந்தபட்சம் 10 வயது நிறைவடைந்து இருந்தால் மட்டுமே ஜூனியர் 'ஒப்பன் வாட்டர்'போட்டிக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

இருந்தாலும் தாரகை தனது தந்தை அரவிந்த் தருண் ஸ்ரீ, சகோதரர் நிஷ்விக் ஆகியோருடன் பாலிதீன் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்.3ல் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 11 மணி 30 நிமிடத்தில் நீந்தி வந்துள்ளனர்.

இந்த நீச்சலின் போது கடலில் கிடந்த 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தியுள்ளார். இளம் ஸ்கூபா டைவிங் வீராங்கனையாக அங்கீகரிக்கப்பட்டால் கடலில் விழுந்த பொருட்களை தேடுவது, கடலில் காணாமல் போனவர்களை தேடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

தாரகை கூறியதாவது: எனது தந்தை ஸ்கூபா டைவிங் வீரர். அவரிடமிருந்து கடலில் ஸ்கூபா டைவிங் செய்ய கற்றுக்கொண்டேன். கடலுக்குள் தனி உலகமே இருக்கிறது. ஆழ்கடலுக்குள் செல்லும் போது நமது மனதை பறிகொடுத்து விடுகிறோம். அந்தளவுக்கு அதிசயங்கள் நிறைந்துள்ளது.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 30 கி.மீ., வந்து அங்கிருந்து மீண்டும் தலைமன்னாருக்கு ஒரே நேரத்தில் நீந்தி முடிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதற்கான மன உறுதியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன். விரைவில் சாதனையை படைப்பேன். எனக்கு 10 வயது நிறைவு பெற்ற பின் ஸ்கூபா டைவிங் வீராங்கனையாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. இதனை எனது வாழ் நாளில் மறக்க முடியாது. கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் உள்ளது. அதனை அப்புறப்படுத்த எனது பள்ளி வகுப்பு தோழிகள் 13 பேருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியளித்து வருகிறேன்.

கடலுக்குள் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார்.

இவரை பாராட்ட 90031 22231



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us