sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/பாதத்தில் ஏழு தையல்: ஆனாலும் ஓடினார் சாம் வசந்த்!

பாதத்தில் ஏழு தையல்: ஆனாலும் ஓடினார் சாம் வசந்த்!

பாதத்தில் ஏழு தையல்: ஆனாலும் ஓடினார் சாம் வசந்த்!


ADDED : மார் 22, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளையாட்டு என்பது வெறும் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. சாதிக்க துடிப்பவர்களுக்கு அதுவொரு பற்று... வெறி!

அப்படி, விபத்தால் காலில் காயமடைந்த இக்கட்டான சூழலிலும், 20 நாள் படுக்கைக்கு பின் வீறுகொண்டு ஓடி, பதக்கம் வென்றுள்ளார் சாம் வசந்த்.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவன் இவர். கர்நாடகாவில் நடந்த 85வது அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பாரதியார் பல்கலை அணியில் பங்கேற்றார். இறுதி சுற்றுக்கு முந்தைய 100 மீ., ஓட்டத்தை 10.39 வினாடிகளில் கடந்து, 8 ஆண்டுகால சாதனையை (10.41 வினாடி) முறியடித்துள்ளார்.

இறுதி போட்டியில், 100 மீ. தூரத்தை 10.44 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

''2024ல் குண்டூரில் தென் மண்டல தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. போட்டிக்கு 20 நாட்களுக்கு முன்பு பைக் விபத்தில் அவனுடைய வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டு 7 தையல் போடப்பட்டது. டாக்டர் அறிவுரையை மீறி போட்டியில் பங்கேற்றான். எங்களுக்கு கவலையாக தான் இருந்தது. ஆனால் அபாரமாக ஓடி வெள்ளி பதக்கம் வென்று விட்டான்,'' என்று பெருமை பொங்க பேசுகிறார் சாம் வசந்தின் தாய் கலைச்செல்வி. கடந்தாண்டு சென்னையில் நடந்த 'ஓபன் அதலெடிக் சாம்பியன்ஷிப்' 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம், திருவனந்தபுரத்தில் நடந்த 'இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் மீட்' போட்டியில் இரண்டாம் இடம் என, பல்வேறு பதக்கங்களை குவித்துள்ள இவரது சாதனை பட்டியல் நீள்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us