தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ ஓர் இரவில் மலர்ந்த சிப்பாய்க் கள்ளிகள்

ஓர் இரவில் மலர்ந்த சிப்பாய்க் கள்ளிகள்

ஓர் இரவில் மலர்ந்த சிப்பாய்க் கள்ளிகள்


ADDED : செப் 19, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானம் பார்த்து வறண்டு கிடந்த திருப்பூர் மக்களின் மனங்களை குளிர்விக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தியன்று மாலை தொடங்கி நள்ளிரவு கடந்தும் மழை பெய்தது. காங்கயம் பகுதியில் மட்டும் 32 மி.மீ. மழை பதிவானது.

இந்த மழையைவிட, அதே பகுதியில் நடந்த ஒரு இயற்கை நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காங்கயம் சுற்றுவட்டார விவசாய நிலங்களில் உயிர்வேலியாக இருக்கும் ‘சிப்பாய்க் கள்ளி’ செடிகள், மழைக்குப் பின் ஒரே இரவில் ஏராளமான பூக்களை மலரச் செய்துள்ளன.

இந்த நிகழ்வை நேரில் பார்த்த, ‘வெற்றி’ அறக்கட்டளையின் செயல் அலுவலர் நடராஜ் இப்படி சிலாக்கிறார்...

‘வெற்றி’ அறக்கட்டளையின் மரக்கன்று நடும் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான எறும்புகள் இடம் மாறிச் செல்வதைக் கவனித்தேன். நத்தக்காடையூர் செல்லும் வழியில் இருந்த ‘சிப்பாய்க் கள்ளி’ வேலியிலும் நிறைய மொட்டுகள் இருந்தன. விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 7:45 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்றபோது, மழை பெய்து கொண்டிருந்தது. மழைநீர் பட்டிருந்த அந்த மொட்டுகள் மூடியிருந்தன.

மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு மீண்டும் சென்று பார்த்தபோது, அந்த உயிர்வேலி முழுவதும் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் மலர்ந்திருந்தன. பூக்களில் இருந்து நல்ல நறுமணமும் வீசியது. சூரிய ஒளி பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பூக்கள் மூடிக்கொண்டு தலை குனிந்து விட்டன.

சிப்பாய்க் கள்ளியின் இந்த இரவு நேர மலர்ச்சி, இயற்கையின் ஒரு சுவாரசியமான நிகழ்வு. இரவில் செயல்படும் அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் போன்ற உயிரினங்களுக்கு இந்த மலர்கள் உணவுக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் பயன்படுகின்றன. மழைக்கு முன்பாக எறும்புகள் இடம் மாறுவது போன்ற நிகழ்வுகளையும், மழைக்குப் பிறகு தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களையும் தொடர்ந்து கவனித்தால், இயற்கையின் பல ஆச்சரியங்களைப் புரிந்துகொள்ள முடியும். இயற்கையை நெருக்கமாகக் கவனிக்கத் தொடங்கினால், அதனை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

–––

உயிர்வேலி

கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற சிப்பாய்க் கள்ளி உயிர்வேலிகள் காணப்படுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள உள்ளூர் தாவரங்களையும், அவற்றில் நடைபெறும் இயற்கை மாற்றங்களையும் குழந்தைகளுடன் சேர்ந்து கவனிப்பதும், அவற்றைப் பாதுகாப்பதும் இயற்கை குறித்த புரிதலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us