தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ 'மைக்' முன் பேச பயம் போயே போச்சு!

'மைக்' முன் பேச பயம் போயே போச்சு!

'மைக்' முன் பேச பயம் போயே போச்சு!


UPDATED : செப் 20, 2026 08:09 AM

ADDED : செப் 19, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 08:09 AM ADDED : செப் 19, 2026 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“மற்றவர்களிடம் தைரியமாக பேசவும், குழுவின் முன் பேசவும் பயமாக இருந்தால் முதலில் அந்த பயத்தை விட்டுவிட்டு பேசிப் பழக வேண்டும். சத்தமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும். அப்போதுதான் நமக்குள் இருக்கும் திறமை வெளிப்படும்,” என்கிறார் மாஸ்கோ நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு.

இப்பள்ளியில் தினமும் நடக்கும் இறைவணக்கக் கூட்டத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நாள் மேடையில் மைக் முன் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள் வாசிப்பு, தலைப்புச் செய்திகள், சுவாரஸ்யமான தகவல்கள், கவிதை, கதை சொல்லுதல், பொது அறிவுத் தகவல்கள், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாணவர்கள் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் பேசிப் பழகுகின்றனர்.

ஆரம்பத்தில் முதல் வகுப்பு மாணவர்கள் சிலர் தடுமாறுகின்றனர். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் பயம் நீங்கி சரளமாகப் பேசத் தொடங்குகின்றனர். மற்றவர்கள் முன்பும் தைரியமாக பேசுகின்றனர்.

எங்கள் பள்ளியில் 375 மாணவர்கள் படிக்கின்றனர். மற்றவர்களிடம் பேசும்போதும், குழுவில் உரையாடும்போதும் மாணவர்கள் தயக்கமின்றி இயல்பாக பேச வேண்டும் என்பதற்காக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. மைக் முன் பேசும்போது மாணவர்களுக்கு பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பானது. தொடர்ந்து பயிற்சி அளிப்பதால், அந்த பயத்தைப் போக்க முடியும்.

பேசும்போது ஏதாவது ஒரு வார்த்தையை தவறாகச் சொல்லிவிட்டால் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அடுத்த வரியை தொடர்ந்து தைரியமாக பேச வேண்டும். தெளிவாகவும் தைரியமாகவும் பேசப் பழகும்போது, உடல் மொழியையும் இயல்பாகக் கற்றுக்கொள்வார்கள். மேலும், பிறரது கண்களைப் பார்த்து தயக்கமின்றி பேசுவது, தெளிவாக கருத்துகளை வெளிப்படுத்துவது உள்ளிட்டவற்றையும் தினமும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம் என்கின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us