தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ ' குரலால் ' கலக்கும் 'கலை' யரசன்

 ' குரலால் ' கலக்கும் 'கலை' யரசன்

 ' குரலால் ' கலக்கும் 'கலை' யரசன்


ADDED : ஜன 11, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 06:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ன்றும் கூட போனில், பிரபல நடிகர் போல பேசி, மற்றவர்களை கலாய்ப்பது உண்டு. மிமிக்ரி அவ்வளவு எளிதில், யாருக்கும் வாய்த்திடாத ஒரு கலை.

ஆனால், 16 வயதில், 45 குரல்களில் பேசி அக்கலைக்கு அரசனாகி உள்ளார் ஒரு மாணவர். அவர், பல்லடம் அருகே கரடிவாவி எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் கலையரசன்.

பல குரலில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் கலையரசன் நம்முடன் பகிர்ந்தவை:

நான் எட்டாவது படிக்கும் போது, கும்மியாட்டம் பார்க்க செல்வேன். அங்கு ஒருவர் 'மிமிக்ரி' செய்தார். அது நன்றாக இருந்ததால் மக்கள் ரசித்தனர், மகிழ்ந்தனர்.

சரி மக்களுக்கு விரும்பும்படி நாமும் மிமிக்ரி செய்யலாம் என்று தோன்றியது.

ஊர் திருவிழாக்களில் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி எல்லாம் நடந்தது, நான் மிமிக்ரி செய்வேன் அங்கு தொடங்கி வாய்ப்பை தேடிக்கொண்டேன்.

ஒன்பதாம் வகுப்பில், பள்ளி கலைத்திருவிழாவில் கலந்துகொண்டேன். பத்தாம் வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்தியதால் மிமிக்ரி செய்ய முடியாமல் போனது. இருப்பினும் பொங்கல் திருவிழாவில் மிமிக்ரி செய்தேன். மேடை பயம் குறையத் தொடங்கியது.

பிளஸ் 1 படிக்கும்போது, மீண்டும் ஆரம்பித்து பள்ளி கலைத்திருவிழாவில் கலந்துகொண்டேன். பசுமை பாரம்பரியத்தை பற்றி பேச வேண்டும் என்று சொன்னார்கள்.

அதில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினேன். பழைய நடிகர் குரலில் மிமிக்ரி செய்தால் எளிதில் வெற்றி கிடைக்கும் என்று என் ஆசிரியர் கூறினார். அதன்படி பயிற்சி செய்தேன். மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றேன்.

மாநில போட்டிக்கு நாங்கள் ஒரு பஸ்சில் சென்றோம். மகிழ்ச்சியாக நாங்கள் பலர் சென்றதால் பஸ்சில் கத்திக்கொண்டு சென்றோம். பிறகுதான் தெரிந்தது, கத்தியதால் தொண்டை பாதித்துவிட்டது. என்னால் சரியாக குரல் எடுக்க முடியவில்லை. மற்ற போட்டியில் நன்றாக செய்துவிட்டு மாநில போட்டியில் இப்படி ஆகி விட்டதே என்று தோன்றியது.

அதன்பின், நடிகர் ஜனகராஜ் குரலை பயிற்சி செய்தேன், ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்ற பிரபலங்களின் குரலை எடுத்து பயிற்சி செய்தேன். இறுதியாக மாநில போட்டியிலும் வெற்றி கிடைத்தது.

என்னால் 45 குரல்களில் மிமிக்ரி செய்ய முடியும். அஜித், விஜய், சூர்யா, கமல் போன்ற நடிகர் குரலிலும், மோட்டு, பட்லு, ஜாக்கி சான் போன்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் குரலிலும் பேசுவேன். தினமும் பயிற்சி செய்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us