/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சுனாமியை வெற்றி சுடராக்கிய சூரப்பெண்
/
சுனாமியை வெற்றி சுடராக்கிய சூரப்பெண்
ADDED : ஜன 24, 2025 09:20 AM

இந்தியாவிலேயே சுனாமியில் மிகவும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி வினோதினி.
இவர் சுனாமியில் உயிர் பிழைத்து பிறகு, அர்த்தமுடன் வாழ வேண்டும்,சாதிக்க வேண்டும் ,அதுவும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையோடு பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முதல் இடத்தில வெற்றிகரமாக முடித்தார்.
ஒரு சமூகம் மேம்பட வேண்டும் என்றால் அது அதிகாரத்துடன் கூடிய கல்வியால் மட்டும் தான் முடியும் என்று அறிந்து 2016ல் குருஷேத்ரா ஐஏஎஸ் அகாடமி சென்னையில் தொடங்கி கடலோர மாவட்டத்தில் உள்ள பிள்ளைகள், மலைவாழ் மக்கள், ஊனமுற்றோர், மூன்றாம் பாலினத்தோர் ,பெண் குழந்தைகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு பயிற்சி அளித்து பலரை தேர்ச்சி பெற வைத்தார்.
முத்துசிப்பி
இவரது கல்வி பணியை பார்த்து தேசிய மீனவர் சங்கம்-புது டெல்லி (முதல் மாநாடு முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியால் தொடங்கப்பட்டது ) கல்வி மேம்பாட்டு பிரிவின் தேசிய தலைவராக நியமித்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முத்துசிப்பிகள் என்ற நிகழ்ச்சி மூலம் 14 கடலோர மாவட்டத்திலும் சென்று அங்குள்ள பஞ்சாயத்தார்களை சந்தித்து மக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு முகாம்களை நடத்தினார். சென்னை , கன்னியாகுமரி, ராமேஸ்வரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் முத்துசிப்பிகள் (பயிற்சி பட்டறை ) நடத்தி, மேலும் அவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் ,தேர்வு, புத்தகம் இதை அனைத்தும் விலை இல்லாமல் கொடுத்து இன்று 52 மாணவர்கள், இந்தியாவிலே முதல் முறையாக கடலோடி சமூகத்தில் இருந்தும் மலை வாழ் சமூகத்தில் இருந்தும்.
டி.என்.பி.சி., குரூப்-4 தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒரு விதை வாசுகி வினோதினியின் சமூக சேவை ஆலமர விருட்சமாக வளர வேண்டும் என்பது அவரது நோக்கமாக லட்சியமாக
இருக்கிறது.

