sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

மூன்று வயது... முந்நுாறு வார்த்தைகள் புதிய சாதனை படைத்த விசாகன்

/

மூன்று வயது... முந்நுாறு வார்த்தைகள் புதிய சாதனை படைத்த விசாகன்

மூன்று வயது... முந்நுாறு வார்த்தைகள் புதிய சாதனை படைத்த விசாகன்

மூன்று வயது... முந்நுாறு வார்த்தைகள் புதிய சாதனை படைத்த விசாகன்


ADDED : அக் 06, 2024 10:11 PM

Google News

ADDED : அக் 06, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாதனை படைக்க வயது தடையில்லை. ஆனால் சாதனை என்றால் என்னவென்றே தெரியாத வயதில் சாதித்தால் அதுவே பெரிய சாதனை. மூன்று வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதும் மிகப்பெரிய சாதனை தான். இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த விசாகன்.

எந்த பொருளை காட்டினாலும் அந்த பொருளின் பெயரை சரியாக சொல்லுவதும், விலங்குகள் படத்தை காட்டினால் அதன் பெயர் மட்டுமின்றி, அதன் குரல் சத்தம் எப்படி இருக்குமோ அப்படியே கூறுவதும் இவரது தனிச்சிறப்பு. பறவைகள், மீன்கள், பழங்கள், காய்கறிகள், வாகனங்கள், டிராபிக் சிக்னல்கள், காலநிலைகள் குறித்த படங்களை காட்டினால் சரியாக சொல்வது என முந்நுாறுக்கும் மேற்பட்ட வார்த்தைகளை மூன்று வயதிற்குள் கற்று, தவறில்லாமல் கூறுவதால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தாய் சித்தாரா கூறியதாவது:

என் கணவர் ராஜிவ் கண்ணா பேக்கரி உரிமையாளர். எங்களது மகன் விசாகன் 6 மாதத்தில் தவழும் நேரத்தில் விளையாட்டு பொருட்களை கொடுத்து அதன் பெயரை கூறி பழக்கப்படுத்தினோம். முதல் நாள் காட்டும் பொருளுக்கு மறுநாள் அதன் பெயரை கூறினால் போதும் அந்த பொருளை சரியாக எடுத்துவிடுவதால் அவனது ஞாபகத்திறனை கண்டு வியந்தோம். அதனால் தினமும் புதுப்புது பொருட்கள், விலங்குகள், பறவைகள் உள்ள படங்கள் அச்சிடப்பட்ட கார்டுகள் மூலம் சொல்லிக் கொடுத்தோம்.

விலங்குகள் பெயரை மட்டும் கூறாமல் அது எவ்வாறு சத்தமிடுகிறது என்றும், சிங்கம் படம் காட்டினால் அது கர்ஜிப்பதையும் அவனுக்கு சொல்லி கொடுத்தோம். பின் பல விலங்குகள் சத்தத்தையும் கற்றுக்கொள்ள துவங்கிவிட்டான். இதுபோல் கற்றுக்கொள்வது இரண்டரை வயது வரை தொடர்ந்தது. இதுபோன்று நாங்கள் சொல்லிக்கொடுப்பதை மட்டுமின்றி, மறுநாள் அவன் கூறுவதையும் அலைபேசியில் வீடியோவாக எடுத்து வைத்தேன்.

கலாம் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பினரிடம் எனது மகனின் திறமையை தெரிவித்தேன். அதற்கான வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை எடுத்த வீடியோக்களின் தொகுப்பையும் நிர்வாகிகள் பார்வையிட்டதில் 300க்கும் மேற்பட்ட வார்த்தைகள் தடையின்றி கூறுவதை கவனித்தனர். 'எக்ஸ்ட்ராடினரி கிராஸ்பிங் பவர் ஜீனியஸ் கிட்' எனும் சாதனைக்கான சான்றிதழை வழங்கி கவுரவப்படுத்தினர் என்றார்.

இவரது சாதனையை வாழ்த்த 98430 68623ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us