/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
தான்சானியா தமிழ் சங்க தீபாவளி கொண்டாட்டம்
/
தான்சானியா தமிழ் சங்க தீபாவளி கொண்டாட்டம்
நவ 04, 2024

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் கார்த்திகேயன், பிரபு குமார் ஏற்பாட்டின் பேரில் பட்டேல் சமாஜ் அரங்கில் நடைபெற்றது. ரம்யா வினில், விஜிநாயரின் நடன குழு பங்கு பெற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் தன்சானியா சங்க தமிழ் சங்கத்தின் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தேறியது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சியும் நடந்தேறியது.
நிகழ்ச்சியின் கடைசியாக தன்சானியா தமிழ் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடைபெற பெரிதும் உறுதுணையாக இருந்த நடன அமைப்பாளர்கள், நடன ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், தன்சானியா தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இரவு விருந்துடன் நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா
Advertisement