/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
இலங்கை வெலிகமையில் மீலாதுந்நபி பெருவிழா
/
இலங்கை வெலிகமையில் மீலாதுந்நபி பெருவிழா
செப் 05, 2025

பன்னாட்டு மக்கள் பக்தியுடன் சங்கமிக்க, வெலிகமையில் தொடர்ந்தும் 20ஆவது வருடமாக அத்-தரீக்கத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில், வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாதுந்நபிப் பெருவிழா வெலிகாமம், இலக்கம் 52 ,புஹாரி மஸ்ஜித் மாவத்தை, “பைத்துல் பரகாஹ்” இல்லத்தில், குதுபுஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜுத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களின் பேரரும் அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரியாவின் தற்போதைய ஆத்மீகத் தலைவருமான, சங்கைக்குரிய குதுபுல் இலாஹி கௌதுல் வுஜூதி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் தலைமையில் இன்று ( செப்5) முதல் 7ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு எகிப்து மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கான அக்பரிய்யாத் தரீக்கத்தின் ஆத்மீகத் தலைவரும், எகிப்தின் தாருல் ஹக்கீக்கா ஆய்வு மையத்தின் நிறுவனரும் முதல்வருமான, பன்னூல் ஆசிரியர், கலாநிதி, ஷெய்ஹ் அஹ்மத் ஃபரீத் அல் மஸீதி (அல் அஸ்ஹரி) PhD, அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்புப் பேச்சாளர்களாகள்
சிறப்புப் பேச்சாளர்களாக சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் அபுத்தலாயில், மௌலவி,கலாநிதி, ஷெய்கு அப்துல்லாஹ் (ஜமாலி)ஆலிம் P.hD, மௌலவி அல்ஹாபிழ், மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக்கல்லூரி முதல்வர் ஹைதர் அலி (மிஸ்பாஹி)ஆலிம், சென்னை ஜாமிஆ அல் ஹுதா அரபுக்கல்லூரி முதல்வர், மௌலவி, அல்ஹாபிழ், அஹ்மத் பாஜில் (பாக்கவி) ஆலிம், சென்னை மன்பவுஸ் ஸாலிஹ் அரபுக்கல்லூரி முதல்வர், மௌலவி, அல்ஹாபிழ், அபூபக்கர் (உஸ்மானி) ஆலிம் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
ஆலிம் புலவர், கலீஃபா எஸ். ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரியில் மன்பஈ, பிரபல கஸீதாப் பாடகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.எம். அபுல் பரக்காத் ஹக்கிய்யுல் காதிரி, தமிழ்மாமணி முனைவர் தேரிழந்தூர் தாஜுதீன் பைஜி ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன்று (5ம்தேதி) வெள்ளிக்கிழமை முதல் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில்,
வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து 'புர்தா ஷரீப்'' மற்றும் ''ஃபரீததுன் நளரிய்யா', மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து 'ரசூல் மாலை'யும் இடம்பெறும்.
செப்06ம் தேதி சனிக்கிழமை காலை 8:30 மணிமுதல் இரவு 8:30 மணிவரை மீலாதுன்னபி பெருவிழா நிகழ்ச்சி இடம்பெறுவதோடு, இதில் பிரபல உலமாக்களின் உரைகளும் கஸீதாப் பாடல்களும் நூல் வெளியீடுகளும் இடம்பெறும்.
இணைதுணையற்ற ஏக இறைவனின் பரிபூரண உள்ளமையை இரத்தினச் சுருக்கமாக விளக்க, அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஷெய்க்காகத் திகழ்ந்த குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் வாப்பா நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்கள் இயற்றிய ஆழ்ந்த அகமியம் நிறைந்த கஸீதாவுக்கு எகிப்து நாட்டுக்கான அக்பரிய்யாத் தரீக்காவின் ஆத்மீகத் தலைவர் கலாநிதி, ஷேய்க் அஹ்மத் பாரீத் அல் மஸீதி அல் அஸ்ஹரி அவர்கள் இயற்றிய விரிவுரை நூலான கஃதீருள் கவுன் ஃபீ ஷரஹி நழ்மிஸ்ஸெய்யித் ஜமாலிய்யா கலீல் அவ்ன் ஃபீ வஹ்ததில் வுஜூத் நூல் வெளியீடும் இடம்பெறும்.
செப்7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு வாப்பா நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களால் அரபியில் இயற்றப்பட்ட மௌலித் செய்யித் யாஸீன் மௌலானா (ரலி), மஜ்லிஸும் 10:00 மணிக்கு தக்மீஸ் முஹம்மதிய்யா மஜ்லிஸும் அதனைத் தொடர்ந்து மாநபி புகழ் பாடும் 'ஸுப்ஹான மௌலூத் மஜ்லிஸும் கலாநிதி ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் விஷேட பயான் நிகழ்வும் இடம்பெறும்.
அன்றைய தினம் மாலை 5:30 - 6:30 மணி வரை மீலாதுப்பெருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் அறிஞர்கள் கலந்து சிறப்பிக்கும் மீலாதுந்நபி விஷேட கலந்துரையாடல் வசந்தம் TV இல் ஒளிபரப்பப்படவுள்ளது.
மஃரிப் தொழுகைக்குப் பின் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் 'ராத்திப் மஜ்லிஸும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நமது இலங்கை வாசகர், எம்.எஸ்.எம்.ஸாகிர்.
Advertisement