/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
ஆழ்கடல் மீனவ படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறை
/
ஆழ்கடல் மீனவ படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறை
செப் 09, 2025

கொழும்பு: இலங்கை அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கம் மற்றும் கல்முனை கிராமிய மீனவர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் நடைபெற்றது.
3 நாட்கள் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையின் இறுதி நாள் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புப்பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், கல்முனை ஆழ்கடல் கிராமிய அமைப்பின் செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் கரையோர சங்கங்களின் அமைப்பாளர் எம்.ஜே.எம். ஜெஸீல், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் ஹமீத், அதன் செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பயிற்சிப்பட்டறையில் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் பலர் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
--- நமது வாசகர், எம்.எஸ்.எம்.ஸாகிர்.
Advertisement