/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
வீதிகளைப் புனரமைக்கும் செயல் திட்டம்:
/
வீதிகளைப் புனரமைக்கும் செயல் திட்டம்:

வீதிகளைப் புனரமைக்கும் செயல் திட்டம்:ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் முன்னெடுப்பு
போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டம் (18) ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாத வீதிகள் இத்திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், கணக்காளர் எம்.எப்.பர்ஹான், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெஃபர், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், அட்டாளைச்சேனை பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள், திணைக்களத் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தெற்கு வடிகால் 5ஆவது குறுக்கு சாலை - ஒலுவில், பாத்திமா பள்ளி சாலை - ஒலுவில், வம்மியடி சாலை - பலமுனை, கார்கோ 02ஆவது குறுக்கு வடக்கு சாலை - அட்டாளைச்சேனை-09, புலியடி சாலை -அட்டாளைச்சேனை -15, ஸஹ்ரா பள்ளி குறுக்கு சாலை - அட்டாளைச்சேனை-16 போன்ற வீதிகள் அபிவிருத்தி நடைபெறும் வீதிகளாகும்.
-இலங்கையில் இருந்து எம்.எஸ்.எம்.ஸாகிர்
Advertisement

