
கந்தன் படையெடுப்பின் போது சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் விட்ட வேலானது சூரன் மலை யினையழித்து பின் வரகுமலையை பிளந்து கடலில் வீழ்ந் து மூன்று வேலுருக் கொண்ட கதிர்களை வீசியதாகவும் அவை மூன்றும் நாகர் முனை, மண்டூர், உகந்தை ஆகிய இடங்களில் வீழ்ந்ததாகவும் ஐதீகக் கதை எடுத்தியம்புகின்றன. (மட்டக்களப்பு மாண்மீகம்)உகந்த மலையானது பொத்துவில் தாண்டியடி குமுக்கனுக்குச் செல்லும் நீண்ட காட்டுப் பாதையாகவே அமையப் பெற்றுள்ளன. இத் தலம் தமிழகத்துக் குன்று தோறாடல் மலைக் கோவில்களை நினைவூட்டும் வகையில் அமையப் பெற்றுள்ளது கடலலைகள் தாலாட் டு இசைக்க பச்சை பசேலான காடுகள் கண்களைக் கவர மலையடிவாரத்தினிலே இவ்வாலயம் கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக அதாவது தேசத்துக் கோயிலாக சிறப்புப் பெற்று விளங் குகின்றது.யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மட்டக்களப்பை வாழ் விடமாகக் கொண்ட மார்க்கண்டு முதலியாரே 1885 இல் மலையடி வாரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார் . கோளா விலைச் சேர்ந்த காளியப்பன ைக் குருவாகவும் ஜெயசேகர ஸ்ரீ வன்னிதிசாநாயக என்பவரை வண்ணக்கராக வும் நியமித்தார் பாணமையைச் சேர்ந்த இவர் சைவ பக்தியும் தமிழ்ப்பற்றும் மிக்கவராவார். .இத்தகைய சிறப்பு மிக்க ஆலயம் முன்பு ஆலமரத்தடியில் மேடையில் வேல் மட்டும் வைத்து வழிபடப்பட்ட கோயிலாக காணப்பட்டன. ஆலயத்தில் உள்ள வெண் நாவல் மரமே தல விருட்சமாகும். தேவையான வழிபாடு புதிய கற்காலத்தில் ஏற்பட்டதென ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இது முற்பட்ட காலத்திலேயே வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட தலம் எனக் கருத முடிகின்றது.உகந்தமலையை அண்மியுள்ள பாணம, கூமுனை போன்ற இடங்கள் ஆதிக் குடிகளான இயக்கர் நாகர் வாழ்ந்த இடங்களாவதோடு அவர்களின் வழித் தோன்றலான வேடர் இன்றும் வாழுமிடங்களாகவும் கொள்ளப்படுகின்றன. இவர்களுக்குரிய வேல் வணக்கமே இப்பகுதியில் நிலவியது என்பதற்கு இவ் வாலயம் சான்றாக உள்ளது. இங்கு 'பிராமிலிபிக் கல்வெட்டுக்கள் அதிகம் காணப்பட்டுள்ளன . அதிப் பிராமி மறைய அசோகப் பிராமி இடம் பிடித்துக் கொண்டது.இவ் வரலாற் று சிறப்புமிக்க ஆலயத்தில் முருகப் பெருமான் கதிர்காமத்தில் குடிகொள்வதற்கு முன்பே உகந்தையில் அமர்ந்ததாக கூறப்படுகின்றது. இக் காலத்தில் இலங்கையை ஆண்ட குபேரன் இராவணனின் சகோதரன் ஆவான். நாகர் காலத்தில் ஓர் இந்து சிவன் கோயில் அமைக்க ப்பட்டதாகவும் பின்னர் தனசிங்கன் என்பவனால் இவ்வாலயம் அழிக்கப் பட்டதாகவும் மட்டக்களப்பு மான்மீகம் கூறுகின்றது.- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
Advertisement