sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

கோயில்கள்

/

வேளைக்காற விகாரம்

/

வேளைக்காற விகாரம்

வேளைக்காற விகாரம்

வேளைக்காற விகாரம்


அக் 03, 2023

Google News

அக் 03, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பதி(பதவியா) நகரில் வேளைக்காற விகாரம் அமைந்துள்ளது. பண்டை நாட்களில் தமிழ் நகரமாக விளங்கிய பதி நகரமே இன்று பதவியா என்றழைக்கப்படுகிறது. இங்கு பல சிவாலயங்கள் அமைந்திருந்தன. பல சமூகப் பிரிவுகளைக் கொண்டிருந்த வளர்ச்சியடைந்த பட்டினங்கள் இருந்தன. இவற்றில் ஒன்று ஐபொழில்பட்டினம். ஐபொழில்பட்டினம் வணிகர், பேரிளமையாளர், படைவீரர், கம்மாளர், அந்தணர் போன்ற பல சமூகப் பிரிவினர்களை கொண்டமைந்த ஒரு வீரபட்டினமாகும். இங்கு வேளைக்காறர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். பதவியாவில் கண்டுபிடிக்கப்பட்ட13 நூற்றாண்டிற்குரியதாகக் கருதப்படும் சமஸ்கிரத மொழிச் சாசனம் வேளைக்காற விகாரம் பற்றி விபரிக்கிறது.


புதிதாக அமைக்கப்பட்ட ஒரு விகாரை பற்றிய குறிப்புக்கைக் கொண்டிருக்கும் இக்கல்வெட்டு, வேளைக்காறரில் ஒரு பகுதியினர் தமிழ் பௌத்தர்களாக இருந்த செய்தியினைச் சொல்கிறது. இவ்விகாரையை அமைப்பித்த (உ)லோகநாதன் என்னும் தண்டநாயகன் (சேனாதிபதி) அதன் காவலராகவும், அறங்காவலராகவும் வேளைக்காறரை நியமித்த தகவலை மேற்படிச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.


இத்தொல்லியல் ஆதாரம் கி.பி1128 இல்எழுதப்பட்டதாகக் கருதப்படும் தமிழ்ப்படைத் தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய்விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி பற்றிய சாசனத்தை பெரிதும் ஒத்ததாக அமைந்திருக்கிறது. (பார்க்க - தமிழ்ப்படைத் தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய்விக்கிரமசலாமேகன்பெரும்பள்ளி


எனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' பற்றிய ஆராய்வு அவசியமாகிறது.


- நமது செய்தியாளர் ஞானகுணாளன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us