/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் மெல்லிசை நிகழ்ச்சி
/
ஆக்லாந்தில் மெல்லிசை நிகழ்ச்சி

ஆக்லாந்தில் ரவி முத்துமாணிக்கத்தின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் இளையராஜாவின் இசையில் புகழ் பெற்ற என்றும் நிலைத்து நிற்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜனனி ஜனனி என்ற பாடலை கடவுள் வாழ்த்தாக பாடி தொடர்ந்து புகழ் பெற்ற பாடல்களான அம்மா என்றைழைக்காத உயிரில்லையே, மடை திறந்து, பொன்னாரம் பூவராம். வா பொன் மயிலே, சின்ன கண்ணன் அழைக்கிறான், கோடை கால காற்றே, உறவுகள் தொடர்கதை, பூவே இளைய பூவே, நலம் வாழ எந்நாளும், பனி விழும் மலர்வனம், வா வா வசந்தமே , ராஜ ராஜ சோழன் நான், பூவே செம்பூவே, ஒரு தங்கரதத்தில், மன்றம் வந்து மற்றும் 25 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ வைத்தார். ரசிகர்களை 80 காலகட்டத்திற்கு பாடல்களால் அழைத்து சென்று விட்டார் என்றால் மிகையாகாது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவரின் இசையை கேட்டு ரசித்தனர்.
- ஆக்லாந்திலிருந்து நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement

