/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
கோயில்கள்
/
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆஸ்திரேலியா
/
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆஸ்திரேலியா
ஜன 27, 2009

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெர்த் நகரில் அமைந்துள்ளது அழகும் அருளும் கொஞ்சும் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில். இக்கோயில் மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள சைவ மகா சபையால் 1996 ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சைவ மகா சபை, மேற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும், இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பெர்த் பால முருகன் திருக்கோயில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மாண்டோகலப் எனும் இடத்தில் அமைந்துள்ளது. புறநகர் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பெர்த் நகரில் இருந்து சுமார் 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கலாச்சார முறைப்படியும், அதிநவீன வசதகளுடனும் இக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்ற மையமாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலில் உள்ள கலைக்கூடத்தில் தமிழ் இசை மற்றும் தமிழக நடனங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்களால் நடத்தப்படும் இந்த கலை வளர்ச்சி வகுப்புக்கள் தென்னிந்திய திராவிட கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் நூலகம், கருத்தரங்கம் மற்றும் மேடை ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன்புறம் உள்ள தோட்டத்தின் நடுவே நீரூற்றுடனான சிவன் சிலையை உடைய தியான அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே பார்வதி தேவி, மகா விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதியும், சரவண பொய்கையை போன்ற தோற்றம் கொண்ட குளமும் அமைந்துள்ளது. வினன்னா நகரின் மருத்துவத்துறையின் அனுமதியுடனான சுமார் 600 நபர்கள் தங்கும் வசதி கொண்ட புதிய கட்டிடம் 2003 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது.
கோயில் முகவரி :
Perth Bala Murugan Temple,
12 Mandogalup Road,Mandogalup,
Western Australia- 6167
தொலைப்பேசி : 61 8 9437 9995
இ-மெயில் : murugan@perthmurugan.com
இணையதளம் : www.perthmurugan.com
Advertisement