ஏப் 22, 2026

( “அமெரிக்காவிலிருந்து நான்”
இந்த தலைப்பில் உங்கள் அனுபவங்கள் மற்றும் பகிர விரும்பும் கட்டுரைகள் தினமலரில் வாரம் ஒருமுறை பதிவிட முன்முயற்சி எடுத்துள்ளேன்.
உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தோடு உங்கள் கட்டுரை வெளியிடப்படும்!
கட்டுரைகள்
• தமிழ் சார்ந்தவை (1-2 பக்கம்)
• எந்த தலைப்பிலும் அனுப்பலாம் — அனுபவங்கள், நினைவுகள், பயனுள்ள கருத்துகள், பொருளாதாரம், இந்தியாவின் வளர்ச்சி- டிஜிட்டல் இந்தியா
பகிர்வது எப்படி?
• எழுத விரும்புபோர், மெசேஜ் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள்
• ஷீலா ரமணன்
• 210 843 7620
உலகம் உங்களை உற்று நோக்கட்டும்!!)
பாக்கிய லக்ஷ்மி முருகானந்தம் ( சி.எம். ஏ) , என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .
அமெரிக்கா அமெரிக்கர்கள் மட்டும் வாழும் நாடு அல்ல .அதுவும் நான் வசிக்கும் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் மெக்சிகோ, சீனா,கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்ற பல நாட்டின் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அமெரிக்கா வந்து இறங்கியதும் எனக்கு கிடைத்த கலாச்சார அதிர்ச்சி அவர்கள் மொழியிலோ அல்லது உடையிலோ இல்லை. அவர்கள் உணவில். புரதம் மற்றும் காய்கறிகளின் விகிதத்தையும் , உணவு உண்ணும் நேரத்தையும் கண்டு ஆச்சிர்யம் அடைந்தேன் .
தமிழர்கள் நாமே ஆரோகியமான உணவு பழக்கம் உடையவர்கள் என்று எண்ணி கொண்டிருந்த எனக்கு இது மிகவும் புது கற்றல் . நாம் அரிசி உணவை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் போது, அவர்கள் பயறு வகைகளை மற்றும் புரதத்தை முக்கிய உணவாக உண்கிறார்கள்.மாலை ஆறு மணிக்குள் இரவு உணவை முடித்து கொள்கிறார்கள் .
தமிழ் நாட்டின் முக்கிய தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசும் பயிற்சி பெறுவதற்கு , வீட்டில் பெற்றோர்களை பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே பேச சொல்வார்கள்.
ஆனால் இங்கு பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள், தாய் மொழியை பாதுகாக்க பெற்றோர்களை வீட்டில் தாய் மொழியிலேயே பேச சொல்கிறார்கள்.
இங்கு இருக்கும் இயற்கையை போலவே மனிதர்களும் மிகவும் அழகாகவே இருக்கிறார்கள்.
இவர்கள் வார இறுதிக்காக அவசர அவசரமாக வார நாட்களை சலிப்புடன் ஓட்டுவது இல்லை. சிறு சிறு வேலைகளில் உள்ளவர்கள் வேளை நேரத்தை சந்தோஷமாக வாழ்ந்தே கழிக்கிறார்கள் .உண்மை தானே, இரண்டு நாட்களுக்காக ஐந்து நாட்களை மருந்து போல மென்று முழுங்குவதா ?
இவர்கள் பணத்தை துரத்தி ஓடுபவர்கள் இல்லை, வாழ்க்கையை வாழ்வதற்காக வேலைக்கு செல்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள் .
நன்றியை உரக்க சொல்கிறார்கள். நாம் தவறாக இடித்து விட்டாலும் அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். புதிதாக வருபவர்கள் அங்குள்ள விதிகள் தெரியமால் நடந்து கொள்ளும் போது, விட்டு கொடுத்து செல்கிறார்கள் .
இந்த கலாச்சாரம், பண்பாடு மற்றும் மனிதத்தை இவர்கள் எந்த இதிகாச நூலை படித்து கற்று கொண்டார்கள் என்று தெரியவில்லை .
இவர்கள் பல்வேறு கலாச்சாரத்தை உடையவர்கள் என்பதால்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கிறார்கள்.
இருபினும் சமூகத்திற்காக தன்னை தானே மறைத்து கொள்வதே இல்லை . இது மேலாதிக்க மனப்பாங்கு என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தன்னை தானே மதிக்கவும் நேசிக்கவும் கற்று கொண்டுள்ளார்கள்.
அவர்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் மற்ற கலாச்சாரத்தையும் தன்னை போலவே மதிக்கவும் நேசிக்கவும் செய்கிறர்கள் . ஒருவருக்கு ஒருவர் உள்ள வேறுபாடுகளை மதிக்கிறார்கள். நாம் கைகளால் சாப்பிடுவதைப் அவர்கள் ஏளனம் செய்வது இல்லை. மாறாக, நம் உணவு வகைகளை அவர்கள் சாப்பிடும் போது அந்த உணவிற்கு மரியாதை அளித்து கைகளாலேயே சாப்பிடுகிறார்கள் .
அமெரிக்கா என்றால் சாலை தூய்மை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.தனியார் கட்டிடம் முதல் அரசு பூங்கா வரை அனைத்து இடமும் சுத்தமாகவே இருக்கும் . நேரம் தவறாமல் பேருந்து மற்றும் இரயில் நிலையங்களை கழுவுவது.சாலைகளை சரி செய்வது , வளர்ந்த மர கிளைகளை வெட்டுவது என பராமரிப்பு நடந்து கொண்டே இருக்கும் .
அநேக மக்களுக்கு தெரியாத ஒன்று, இங்கு ஞாயிற்று கிழமைகளில் தமிழ் பள்ளி உண்டு. வகுப்பு வாரியாக,ஒரு சராசரி பள்ளியை போல பாடம் எடுக்கபடும்.புத்தகம், வீட்டு பாடம் அனைத்தும் உண்டு.
முந்தய நூற்றாண்டு எப்படி இருந்ததோ , அதில் இருந்து பெரிதும் வளர்ந்து விட்டது. தமிழ் நாட்டில் கிடைக்கும் அனைத்தும் பெற்று , மேலும் உலக அனுபவமும் கிடைகிறது.
அமெரிக்காவை பார்வையிடும் அனுபவம் ஒன்று, அங்கேயே வசிக்கும் அனுபவம் முற்றிலும் புதியதாய் ஒன்று .
CMA Backya Lakshmi Muruganantham
