sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

ஒரு கடலில் ஒரு கால், மற்றொரு கடலில் இன்னொரு கால் - சாத்தியமா?

/

ஒரு கடலில் ஒரு கால், மற்றொரு கடலில் இன்னொரு கால் - சாத்தியமா?

ஒரு கடலில் ஒரு கால், மற்றொரு கடலில் இன்னொரு கால் - சாத்தியமா?

ஒரு கடலில் ஒரு கால், மற்றொரு கடலில் இன்னொரு கால் - சாத்தியமா?


ஜூன் 07, 2023

Google News

ஜூன் 07, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்று ஒரு சொலவடை உண்டு. ஒரு கடலில் ஒரு கால், மற்றொரு கடலில் இன்னொரு கால் - சாத்தியமா? ஆம் என்பதை டென்மார்க்கின் அழகிய இயற்கை அழகு மற்றும் தனித்துவமான புவியியல் அம்சங்களுக்காக அறியப்பட்ட கிரெனேன் என்ற சுற்றலாத்தலத்தில் கிரெனேன் என்பற்கு ”கிளை ” என்று டேனிஷ் மொழியில் பொருள். நிலப்பரப்பு ஒரு கிளை போலப் பிரிந்து செல்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.


இது டென்மார்க் ஜட்லாண்ட் தீபகற்பத்தின் வடக்கு முனையில் உள்ள ஸ்கெயன் நகரில் வட கடலும், பால்டிக் கடலும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 10,000 ஆண்டுகளுக்கு முன் பனியுகத்திலிருந்து உருவான கடற்கரையின் 'மணல் பட்டை' அல்லது 'மணல் துளி' கடலுக்குள் ஒரு குறுகிய நீண்ட நிலப்பகுதியை உருவாக்கியுள்ளது. அந்த மணற்பரப்பின் முனையை நோக்கி நாம் நெடுந்தூரம் நடந்து செல்லலாம்.


அந்த முடிவின் விளிம்பில், நீங்கள் ஒரு காலை வட கடலிலும், மற்றொரு காலைப் பால்டிக் கடலிலும் வைக்கலாம்! இந்தத் தனித்துவமான இடத்தில் நிற்பது ஓர் அற்புதமான அனுபவம். மற்றொரு வியத்தகு அம்சம் - வட கடல் மற்றும் பால்டிக் கடலில் காணப்படும் நிற வேறுபாடு. வட கடல் பொதுவாக ஆழ்ந்த நீல நிறத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பால்டிக் கடல் பச்சை கலந்த நீலமாக உள்ளது. வண்ண மாறுபாட்டுக்குக் காரணம் கடல் நீரில் கலந்துள்ள மூலப்பொருட்கள் மற்றும் கடல்களின் ஆழம். வட கடல் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. அதன் அதிக அளவு உப்புத்தன்மை ஆழமான நீல நிறத்திற்குப் பங்களிக்கிறது. மறுபுறம், பால்டிக் கடல் உப்பு அளவு, பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளிலிலிருந்து வரும் நன்னீரோட்டங்களால் பாதிக்கப்படுகிறது.


மேலும், பால்டிக் கடல் பொதுவாக வட கடலை விட ஆழமற்றது. அதனால் அதிக சூரிய ஒளியை அதன் நீரில் ஊடுருவ அனுமதிக்கிறது. இதன் விளைவாகப் பச்சை நிறமுடன் தோற்றமளிக்கிறது. அழகிய மணல் கடற்கரைகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகள் உலகெங்குமுள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களைக் கவர்ந்து இழுத்து, கிரெனனை ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது. இயற்கையை அனுபவிக்க விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று இது என்றால் மிகையாகாது.


தனது இனிய அனுபவத்தை தினமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளவர்:


- தினமலர் வாசகி ஹேமா ராமசந்திரன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us