நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை கிரிஞி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் கணபதி ஹோமமும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகத்துடன் அலங்கார ஆராதனை நடைபெற்றது. மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா பஜனை குழுவினர் பரவசமாக பாடினார்கள். நகரின் மேயர், துணை பொறியாளர் கோயில் கட்டும் பணி பற்றி பக்தர்களிடம் உரையாடினார்கள் .அவர்களுடன் திருப்பணி குழுவினரும் கலந்து கொண்டனர் .குருக்கள், அந்தணர்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பான முறையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து பக்தர்களும் விநாயகரின் ஆசி பெற்று பிரசாதம் பெற்று இல்லம் திரும்பினார்கள்.- தினமலர் வாசகர் ஹரேராம் தியாகராஜன்
Advertisement