/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26வது ஆண்டு விழா
/
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26வது ஆண்டு விழா
மே 31, 2025

ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் பயிற்சி மையத்தின் முதல் பருவ நிறைவு விழா நடைபெற்றது. செந்தில் ராஜா, அல் அமான் ஒருங்கிணைத்த இந்திய, சவுதி தேசிய கீதங்கள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஜெய் ஷங்கர் நிகழ்ச்சி ஆரம்பித்து வைத்தார்.. முதல் நிகழ்வாக ஃபஹீம் கிராத் ஓத, அதனைத் தொடர்ந்து, பார்த்திபன் ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் வரலாறு சுருக்கமாக எடுத்துரைக்க, அபிநேத்ரா ஆனந்த், யுத்திகா ஜெயரவீந்திரனின் பரதநாட்டிய வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
காஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றிட, பார்த்திபன் முன்னுரை வழங்கினார், தொடர்ந்து, டாக்டர் ஜெயஸ்ரீ மூர்த்தி தமிழ்ப் பயிற்சி மையத்தின் நோக்கம் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கினார். முக்கிய விருந்தினர்களை பேரரசு, ரமணன் கவுரவிக்க, இந்த நிகழ்வில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற தமிழக மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினராக இந்திய பன்னாட்டுப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஹேமா, சுபேர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினர்.
தமிழ் பயிற்சி மையத்தில் பயின்ற குழந்தைகள்
1. பஞ்சதந்திர கதைகள்
2.தெனாலிராமன் & அக்பர் பீர்பால் கதைகள்
3. திருக்குறள் நீதிக் கதைகள்
என்ற தலைப்புகளில் நீதி கதைகள் பேசி தங்கள் திறமை வெளிப்படுத்தினர். அவர்களை பாராட்டி பதக்கங்கள் வழங்கி உற்சபட வைத்தனர்.
பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களையும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணாக்கர்களையும் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஆறு மாணவ மாணவிகளையும் பாராட்டி, அஹமத் பாஷா, பயாஸ் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.
தமிழ்ப் பயிற்சி மைய முதல் பருவ நிறைவு விழா
மேலும், கடந்த 8 மாதங்களுக்கு முன், ஜெத்தா தமிழ்ச் சங்கத்தால் துவங்கப்பட்ட தமிழ் சிறார்களுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் தமிழ்ப் பயிற்சி மையத்தின் முதல் பருவ நிறைவு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஐந்து முதல் ஏழு வயது வரை உள்ள சிறார்கள் தங்கள் அழகுத் தமிழில் பேசி அரங்கேற்றிய தமிழ் நாடகம் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகள் காண்போரை கவரும் விதமாக அமைந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் துணை முதல்வர் ஃபரா மசூத், அல் உரூத் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, தமிழ்ப் பயிற்சி மைய வகுப்புகள் தொடர்ந்து நடத்துவதற்கு வகுப்பறைகள் கொடுத்து நமது தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் டெல்லி பப்ளிக் ஸ்கூல் மற்றும் அல் பலா இன்டர்நேஷனல் பள்ளி கல்வி இயக்குனர் ஹுமைரா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் விழாவில்
இதில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழும், பதக்கமும் ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. கடந்த 8 மாதங்களாக குழந்தைகளுக்கான தமிழ்ப் பயிற்சி அளித்த தன்னார்வல ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நினைவு பரிசை மூர்த்தி, ராமானுஜம் வழங்கினர். கல்வி திட்டக் குழு உறுப்பினர்கள் முனைவர் ஹேமா, முனைவர் தங்கம், டாக்டர் ஜெயஸ்ரீ மூர்த்தி, டாக்டர் கவிதா, மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் சத்யாஆகியோரின் பங்களிப்புடன் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் அனைத்து நிர்வாக உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
தமிழ்ப் பயிற்சி மாணவர்களின் அல்லி, மல்லிகை, சூரியகாந்தி பிரிவினரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நன்றி உரையுடன் தமிழ் பயிற்சி மாணவர்களுக்கான விழாவின் முதல் பருவ நிறைவு விழா சிறப்பாக நடந்தது.
அதனை தொடர்ந்து விருந்தினர்களுடன் தன்னார்வலர் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலில் வருங்கால தமிழ்ப் பயிற்சி மையத்தின் திட்டங்கள் குறித்தும் பிள்ளைகளுக்கு மேலும் தமிழை எடுத்து செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மூர்த்தி பூங்கொத்து வழங்கினார். சுமார் 4 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியின் இறுதியில் இஜாஸ் நன்றியுரையாற்றினார்.
இறுதியாக பெற்றோர்கள் சார்பாக கணேஷ், குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜெத்தா தமிழ்ச்சங்கம் முன்னெடுத்திருக்கும் இந்த திட்டத்திற்கு மனதார பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்தார்.
நிகழ்வை ஜெய்சங்கர், செந்தில் ராஜா சிறப்பாக தொகுத்து வழங்கினர். தொடர்ந்து இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement