/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அமீரகத்தில் 83,213 பேர் பங்கேற்ற தூய்மைப்பணி முகாம் நிறைவு
/
அமீரகத்தில் 83,213 பேர் பங்கேற்ற தூய்மைப்பணி முகாம் நிறைவு
அமீரகத்தில் 83,213 பேர் பங்கேற்ற தூய்மைப்பணி முகாம் நிறைவு
அமீரகத்தில் 83,213 பேர் பங்கேற்ற தூய்மைப்பணி முகாம் நிறைவு
டிச 15, 2024

துபாய்: துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 23வது ஆண்டாக தூய்மைப் பணிமுகாம் நிறைவடைந்தது.
உம் அல் குவைன் பகுதியில் நடந்த நிறைவு விழாவில் அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டாக்டர் அம்னா பிந்த் அப்துல்லா அல் தஹக், அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமீரகம் முழுவதும் நடந்த தூய்மை பணி முகாமில் 83,123 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் 43,544 கிலோ கிராம் கழிவுகளை சேகரித்தனர்.
இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement