/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் காங்கிரஸ் 141வது ஆண்டு விழா
/
ஜெத்தாவில் காங்கிரஸ் 141வது ஆண்டு விழா
டிச 30, 2025

ஜெத்தாவில் காங்கிரஸ் 141வது ஆண்டு விழா
ஜெத்தா OICC மேற்குக் மண்டலக் குழு, இந்திய தேசிய காங்கிரஸின் 141 வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பித்து 140 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எண்ணற்ற சவால்களும் இடையறாத விமர்சனங்களும் இருந்தபோதும், காங்கிரஸ் அசைக்க முடியாத வலிமையுடன், தைரியத்துடன், நாளைய நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிறது என்று ஆண்டு விழாவில் பேசியவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சிக்கு OICC மேற்குக் மண்டலக் குழு தலைவர் ஹக்கீம் பாரக்கல் தலைமையேற்றார். Badr Al Tamam மருத்துவக் குழுமத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் டாக்டர் அஷ்ரப் இரும்புழி வாழ்த்தி பேசினார். பொதுச் செயலாளர் அஷப் வர்க்கலா வரவேற்றார்; மண்டலக் குழு நிர்வாக உறுப்பினர் மஜீத் சேரூர் நன்றி கூறினார்.
துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் காவும்பாய், அப்துல் காதர் ஆலவாய், அபூபக்கர் திருவனந்தபுரம், நௌஷாத் சாலியார், மூசா தலைச்சேரி , சிமி அப்துல் காதர், சக்கரியா, நாசர் வயநாடு, ஆஷிக் மண்ணார், பிரின்ஸ் கொல்லம் ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்தனர்.
-ஜெத்தாவில் இருந்த நமது செய்தியாளர் சிராஜ்
Advertisement

