/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்
/
துபாயில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

துபாய்: துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் தீபாவளிப் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பர்துபாய் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. துபாயின் அல் சீப், குளோபல் வில்லேஜ் உள்ளிட்ட பல இடங்களிலும் வண்ணமிகு வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டது.
தொழிலாளர் முகாம்களில் தொழிலாளர்கள் தீபாவளியையொட்டி பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயார் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இனிப்புகளும் வழங்கப்பட்டது.
துபாய் ஹிந்து கோவில் அபுதாபி பாப்ஸ் ஹிந்து கோவில் ஆகியவற்றில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement