
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்டில் தீபாவளி மேளா !
மஸ்கட் :
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சமூக நல மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
குஜராத் சமாஜத்தின் சார்பில் தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் திறந்து வைத்து வர்த்தகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் குஜராத் சமாஜத்தின் இந்திய முயற்சிகளுக்கு இந்திய தூதரகம் உதவியாக இருக்கும் என்றார்.
----துபாயில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement