/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் குடும்ப சங்கமத் திருவிழா
/
ரியாத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் குடும்ப சங்கமத் திருவிழா
ரியாத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் குடும்ப சங்கமத் திருவிழா
ரியாத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் குடும்ப சங்கமத் திருவிழா
அக் 13, 2025

ரியாத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் குடும்ப சங்கமத் திருவிழா
ரியாத்தின் பழமையான தமிழ் அமைப்புகளில் ஒன்றான தமிழ் கலாச்சாரக் கழகம் (TCS) சார்பில் “மாபெரும் குடும்ப சங்கமத் திருவிழா” கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரியாத்தில் நடைபெற்றது.
விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, நாள் முழுவதும் உற்சாகமும் பாரம்பரியமும் கலந்த ஒரு இனிய திருவிழாவாக கொண்டாடினர்.
நிகழ்வின் துவக்கத்தில் மூத்த நிர்வாக உறுப்பினர் ஷாகுல், சங்கத்தின் தோற்றம், சாதனைகள் மற்றும் தற்போதைய பணிகள் குறித்து பேசினார். மூத்த உறுப்பினர் சகாயம், வரும் 2026ஆண்டு தமிழ் கலாச்சாரக் கழகத்தின் 30ஆம் ஆண்டு விழா மாபெரும் தமிழர் திருவிழாவாக பல தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளுடன் கொண்டாடப்படவுள்ளதாகவும், அதற்கான முன்னோட்டமாகவே இந்த குடும்ப சங்கம விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் சஜ்ஜாவுதீன் மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக Euro Gulf Safety Consultant நிறுவனத்தின் பரத் வழிநடத்தலில் “முதலுதவி, சிபிஆர் மற்றும் உணவு அடைப்பு நிலைகளில் அவசர உதவி” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Visible Stars Projects குழுமம் ஏற்பாடு செய்திருந்த ஸ்னூக்கர், மேசைப்பந்து, உள்ளரங்கு கால்பந்து போன்ற விளையாட்டு நிகழ்வுகள் அனைத்து வயதினரையும் ஈர்த்தன.
உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் தமிழ் வார்த்தைச் சவால், பழமொழிப் போட்டி ஆகியவை நடைபெற்றன. வெளி விளையாட்டுகளில் கயிறு இழுத்தல், சாக்குப் போட்டி, எலுமிச்சை கரண்டி பந்தயம் போன்ற போட்டிகள் நடந்தன.
நிறைவில் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு, இனிய சமூக விருந்து உபசரிக்கப்பட்டது.
பங்கேற்ற பலரும், “நெடுநாட்களுக்குப் பிறகு சவூதிவாழ் தமிழ் சமூகத்திற்கு ஒரு தமிழ் திருவிழா அனுபவம் கிடைத்தது” என மகிழ்ச்சியுடன் தமிழ் கலாச்சாரக் கழக உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
- ரியாத்தில் இருந்து ஆரிப் அப்துல் சலா
Advertisement