/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அசீர் NRT ன் உதவியால் தாயகம் திரும்பி தமிழர்
/
அசீர் NRT ன் உதவியால் தாயகம் திரும்பி தமிழர்
அக் 13, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி சென்றபோது, எதிர்பாராத சிக்கல்களில் சிக்கிய நேரத்தில், அவருக்கு தாராளமான உதவிக்கரம் நீட்டியது அசீர் NRT அமைப்பு.
சவூதி அரேபியாவின் அசீர் மண்டலத்தில் உள்ள பிஷா நகரில் “வீட்டு பண்ணை வேலை” என்ற பெயரில் முருகன் அனுப்பப்பட்டார். ஆனால், அவர் அங்கு சென்ற பின்னர், வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு விவரங்கள் உண்மையில் முற்றிலும் வேறுபட்டவை என்பதை உணர்ந்தார். உடல்நலக் குறைபாடுகள் காரணமாக ஸ்பான்சர் கேட்டபடி வேலை செய்ய இயலாமல், எந்தத் துணையும் இன்றி தனிமையில் பெரும் அவஸ்தை அனுபவித்தார்.
இந்த கடுமையான சூழ்நிலையில், அசீர் NRT இடம் அவர் உதவி கோரினார். உடனடியாக NRT ன் பாராலீகல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தோஷ் மற்றும் அசீர் NRT குழுவினர் துரிதமாக தலையிட்டு, தேவையான சட்ட, நடைமுறை மற்றும் பயண உதவிகள் வழங்கி, அவரை பாதுகாப்பாக விடுவிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தனர்.
அசீர் NRT-யின் பெரும் முயற்சியால், முருகன் தமிழ்நாட்டுக்கு திரும்பி, தற்போது தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கும் நமது தமிழ் சகோதரகளுக்கு துணையாக நிற்கும் என்று அசீர் NRT-யின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இக்கட்டான சூழ்நிலையில் உடனடி உதவி செய்த டாக்டர் சந்தோஷ் மற்றும் அசீர் NRT குழுவினருக்கு ( இஸ்மாயில் ஹுசைன் மற்றும் ஹசன் பாரூக்) முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
- ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement