/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் அமீரக குறும்பட விழா; கதைகள் அனுப்ப அழைப்பு
/
துபாயில் அமீரக குறும்பட விழா; கதைகள் அனுப்ப அழைப்பு
துபாயில் அமீரக குறும்பட விழா; கதைகள் அனுப்ப அழைப்பு
துபாயில் அமீரக குறும்பட விழா; கதைகள் அனுப்ப அழைப்பு
நவ 16, 2024

துபாய் : கற்பனை வளம் மிக்க அமீரக எழுத்தாளர்களுக்கு சவாலாக அமைவது, தங்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை ஒரு குறும்படமாகவும் எடுத்து போட்டியில் வெல்லும் மிக மகிழ்வான தருணமான அமீரக குறும்பட விழா!
பீதி மிகுந்த கொரோனா கால கட்டமான 2020 ல் தொடங்கிய இந்த விழாவில், இப்போது அதை கடந்த பின்பும், எழுத்தாளர்களும் இயக்குனர்களும் தொடர்ச்சியாக பங்கு கொள்வது ஆர்வத்தை குறிக்கிறது.
இவ்வருட நிகழ்விற்கும், தமிழில் தட்டச்சு செய்த முழுமையான கதை வசனங்கள் பெறப்பட்டதும், சிறப்பு விருந்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகள் குறும்படமாக எடுக்க அனுமதிக்கப்படும். 12 நபர்கள் கொண்ட குழுவில், 12 நிமிடத்திற்கு உட்பட்ட குறும்படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தயாரிக்கப்பட்ட குறும்படங்களை திரை அரங்கில் காணும் வாய்ப்பும், சிறப்பான படங்களுக்கு 12 விதமான பரிசுகளும் பங்கு கொள்வோருக்கு நினைவு சின்னங்களும் அளிக்கப்படும். கதைகளை அனுப்ப வேண்டிய இணைய முகவரி 2025ameeragakurumpadavizha@gmail.com தொலைபேசி 050 3920387
அமீரகத்தில் உள்ள அனைத்து நகரங்களில் உள்ளவர்களும் பங்கு கொள்ளுமாறு விழா அமைப்பினரான ஆனந்த் மற்றும் ரமா மலர் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement