/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜா 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இந்திய மாணவர்கள் எழுதிய கதை நூல் வெளியீடு

நவ 17, 2024

ஷார்ஜா : ஷார்ஜா 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இந்திய மாணவர்கள் எழுதிய கதை நூல் வெளியிடப்பட்டது.
ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 43வது சர்வதேச புத்தக கண்காட்சி, ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி ஆதரவுடன், 'புத்தகத்துடன் தொடங்குங்கள்' என்ற கருப்பொருளில் நடக்கிறது.
இந்த கண்காட்சியில் விமெண்டர் அமைப்பின் சார்பில் 17 இந்திய மாணவ, மாணவியர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'ஸ்டோரி கார்ட்-பாகம் 4' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தை சார்ஜா அஸ்பம் இந்தியன் சர்வதேச பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஷீலா ஜார்ஜ் வெளியிட்டு பேசினார். இளம் வயதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கிய விமெண்டர் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவில் வானொலி அறிவிப்பாளர் மிதுன், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன் வாழ்த்துரை வழங்கினர். புத்தக கண்காட்சியில் நூலை வெளியிட்ட மாணவ, மாணவியருக்கு சார்ஜா புத்தக ஆணையத்தின் அலுவலர் மோகன் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெயஸ்ரீ மேனன், லதா கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர். ஊடகவியலாலர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-நமது செய்தியாளர் காஹிலா
Advertisement