/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அமீரகத்தில் புகழ் மணத்த நபிகளாரின் அருமை மகளார் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்
/
அமீரகத்தில் புகழ் மணத்த நபிகளாரின் அருமை மகளார் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்
அமீரகத்தில் புகழ் மணத்த நபிகளாரின் அருமை மகளார் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்
அமீரகத்தில் புகழ் மணத்த நபிகளாரின் அருமை மகளார் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்
மார் 04, 2025

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் சங்கைமிகு அஷ்ஷைகு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் அலி மவுலானா அல் ஹஸனிய்யுல் ஹூசைனிய்யுல் ஹாஷிமி நாயகம் அவர்களின் அறிவுறுத்தல் வழிகாட்டிதல் படி துபாய் நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் சங்கை மிகு அஸ்ஸய்யிது ஜமாலிய்யா சையது கலீல்அவுன் மவுலானா நாயகம் கத்தஸல்லாஹூ சிர்ருஹூல் அஜீஜ் அவர்கள் ஆக்கிய முந்நூறுக்கு மேற்பட்ட கண்ணிகள் கொண்ட *பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்* அன்னை அவர்களின் நிணைவு நாளில் மிகவும் விமர்சையுடன் நடைபெற்றது.
மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. இதில் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையினர் மற்றும் அல்லாது பல ஊர்களின் ஜமாஅத்தார்கள் , சகோதர சமயத்தை சார்ந்தவர்களும் மிகவும் பக்தி பெருக்குடன் அழகு தமிழிலும், அதே வேளையில் பரிசுத்த நாயகியாரின்
வாழ்வியலை முழுமையாகவும் தெளிவுப்படுத்தும் விதமாக ஆக்கப்பட்ட வாழ்வியலை பக்தியுடனும் உருக்கத்துடனும் மாலையை ஓதினார்கள்.
தொடர்ந்து கலிபா முனைவர் ஸஹாப்தீன் அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார்கள். அதைத் தொடர்ந்து ஸெய்யித் அலி மௌலானா அவர்கள் உரையாற்றினார்கள்.
தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து இப்புனித மாதத்தினை முன்னிட்டு தராவிற் தொழுகை மற்றும் பயான் நிகழ்வுக்காக வருகை தந்துள்ள மௌலவி ஹஜ்ரத் இ.எஸ். முஹம்மது அபுபக்கர் பைஜி உலவி அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள்.
பின் உணர்ச்சி பெருக்கோடு கலிபா முனைவர் M. J. முஹம்மது இக்பால் அவர்கள் சூரத்துல் ஹவ்ஸரில் , கவ்ஸர் என்பது என்ன , பாத்திமா நாயகியார் மூலம் நபி பெருமானார் சல்லலாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறை கியாமத் வரை தொடரும் என்றும், நபி அவர்களை மனம் நோவினை செய்த மக்கள் அபத்தர்களாக இறைவன் ஆக்கி விட்டான் என்பதை சிறப்பான முறையில் பேசினார்கள்.
நிறைவாக இஃப்தார் நிகழ்வோடு இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதில், மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத், யுஏஇ பிரிவு, கோட்டைப்பள்ளி மௌலித் கமிட்டி, துபாய், ஜனாப் ஜமால் மைதீன், பொதுச் செயலாளர், ஜமால் முஹம்மது காலேஜ் முன்னாள் மாணவர் சங்கம, ஜனாப் பரக்கத் அலி உதவிச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, இரவி முத்து,தலைவர், அமீரக செந்தமிழர் பாசறை, தமிழகத்திலிருந்து வருகை தந்த இ யூ மு லீக் மாநில ஆலோசகர் எம் ஜே அப்துல் ரவூப் மற்றும் அமீரகத்தின் பல பகுதிகளை சார்ந்த சபையினர் மேலும் பல ஊர் ஜமாஅத்களை சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி நேரலை (Live Telecast ) செய்யப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் விழா குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் ! விழாவினை தொடர்ந்து அணைவருக்கும் இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது !
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement