/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அசீர் தமிழ்ச் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
/
அசீர் தமிழ்ச் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
அசீர் தமிழ்ச் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
அசீர் தமிழ்ச் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
பிப் 23, 2025

அபஹாவில், அசீர் தமிழ்ச் சங்கம், சவூதி தெலுங்கு சங்கம் ஆகியோர் பாஹிஜ் மருத்துவ குழுமத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் இலானா பன்னாட்டு பள்ளியில் நடத்தினர். இதில் அசீர் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், தெலுங்கு சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாம் சிறப்பாக நடத்தினர். பாஹிஜ் மருத்துவ குழும நிர்வாக தலைவர் மற்றும் இலானா பன்னாட்டு பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
மருத்துவ முகாமில் பெண்களின் மகப்பேறு பிரச்சினைகள், மற்றும் குழந்தைகளுக்கான செவித்திறன், பேச்சுத்திறமை குறைபாடுகள், முடநீக்கியல் மருத்துவம், மற்றும் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement