
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் அப்பாஸியா பகுதியில் உள்ள இந்தியன் லேனர்ஸ் ஓன் அகாடமி பள்ளிக்கூடத்தில் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி காந்தி ஜெயந்தி சிறப்புடன் நடந்தது.
இந்திய தூதரக அதிகாரி சஞ்சய் கே முலுகா காந்தியடிகளின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். மேலும் காந்தியடிகளின் போதனைகளான அகிம்சை, உண்மை, வன்முறை எதிர்ப்பு உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்து பேசினார்.
காந்தியடிகளின் போதனைகளை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பள்ளிக்கூட முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement