/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஈராக்கில் காந்தி ஜெயந்தி அமைதி பேரணி
/
ஈராக்கில் காந்தி ஜெயந்தி அமைதி பேரணி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இந்திய தூதரகத்தின் சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி யோகா நிகழ்ச்சி மற்றும் அமைதி பேரணி நடந்தது.
யோகா பயிற்சியின் போது பயிற்சியாளர் எளிய வகை செய்து காண்பிக்க அதை பின்பற்றி ஈராக் நாட்டினரும், தூதரக அதிகாரிகளும் செய்தனர்.
மேலும் முக்கிய சாலை ஒன்றில் அமைதி பேரணி நடந்தது. இதில் தூதரக அதிகாரிகள், ஈராக் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement