/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் குளோபல் வில்லேஜ் கண்காட்சி
/
துபாயில் குளோபல் வில்லேஜ் கண்காட்சி

துபாய்: துபாயில் உள்ள முக்கிய பொழுது போக்கு மையங்களில் ஒன்று குளோபல் வில்லேஜ் கண்காட்சி. இந்த கண்காட்சி துபாய் லேண்ட் பகுதியில் ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் அமைந்துள்ளது. இந்த கண்காட்சி அக்டோபர் 15 ஆம் தேதி மாலை வண்ணமிகு வாண வேடிக்கைகளுடன் தொடங்கியது. பல்வேறு இசைக்குழுவினர் பொதுமக்களை வரவேற்கும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.
முதல் நாளன்றே பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் குவிந்திருந்தனர். வண்ணமிகு வாண வேடிக்கைகளை அனைவரும் ரசித்தனர். தீபாவளியையொட்டி வாண வேடிக்கைகள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அரங்குகளை அமைத்துள்ளன. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரையிலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பார்வையிட முடியும். அரபு, இந்திய, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உணவுகளை ருசிக்கும் வகையில் கடைகள் அமைந்துள்ளன. மாணவ, மாணவியர் விளையாடக்கூடிய பல்வேறு வசதிகள் உள்ளன. அடுத்த ஆண்டு 2026 மே மாதம் 10 ஆம் தேதி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
----- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement