/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஈரானில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்
/
ஈரானில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான் : ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இந்திய தூதரகத்தின் சார்பில் ஹோலிப் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த விழாவை சிறப்பான முறையில் செய்திருந்த இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement