/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பசி தீர்க்கும் ‛‛ஒன் மீல்'' திட்டம்
/
பசி தீர்க்கும் ‛‛ஒன் மீல்'' திட்டம்

பசி தீர்க்கும் ‛‛ஒன் மீல்'' திட்டம்
ஜெத்தா: பசி மதம், சாதி, நிறம், எல்லைகளையும் அறியாத மனிதகுல சவால் என்பதை உணர்ந்து, தனது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் 'ஒன் மீல்' மனிதநேய முயற்சியை முன்னெடுத்தது. வெறும் சொற்களால் அல்ல, செயல்களால் கருணையை வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெத்தாவில் தொலைதூரப் பகுதிகளில் உணவுக் கிட்கள் 700-க்கும் மேற்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டன. ஜெத்தா, மக்கா, மதீனா ஆகிய இடங்களில் இருந்து உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
பெண்களின் தலைமையும் செயல் வீரியமான பங்கேற்பும் இந்த முயற்சிக்கு கூடுதல் வலிமை அளித்தது. “இந்த பூமியில் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது” என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மனித மரியாதையையும் அனுதாபத்தையும் காக்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'ஒன் மீல்' என்பது பசிக்கு எதிரான மலபார் அடுக்களை அமைப்பின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என தலைவர் முகம்மது அலி சக்கோத் தெரிவித்தார்.
ஜெத்தா ஒருங்கிணைப்பாளர் குப்ரா லத்தீஃபின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிநடத்தலின் கீழ், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஷம்சீரா நஜ்முதீன், ஆஷிகா ராம்நாஸ், சஹீரா சவாத், ஷப்னம் பாபு, ஹசீனா அஃப்சல், சுனீரா, சுருமி, மும்தாஸ், ஃபைசா கஃபூர், ஷாஹிதா ஜலீல், லத்தீஃப், பதுஷா, ஜோதி மற்றும் அமீனா ஆகியோர் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய அனைத்திலும் அயராது உழைத்தனர்.
- ஜெத்தாவில் இருந்து நமது செய்தியாளர் எம்.சிராஜ்
Advertisement

