/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷியாம் மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது
/
ஷியாம் மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது
பிப் 07, 2026

ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர் ஷியாம், துபாயில் அமைந்துள்ள குரு நானக் தர்பார் குருத்வாராவில் நடைபெற்ற வீர் பால்திவஸ் வீரதீர விருது வழங்கும் சிறப்பு நிகழ்வில், பெருமைமிக்க வீரதீர விருதைப் பெற்றார்.
இந்த நிகழ்ச்சி, இந்திய சிறுபான்மையினர் மையம் (IMF) மற்றும் குரு நானக் தர்பார் குருத்வாரா துபாய் இணைந்து ஏற்பாடு செய்ததாகும். குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் - சாஹிப்ஜாதாக்களின் வீரத் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26ஆம் தேதி வீர் பால்திவஸ் தினமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதன் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்த விழாவில், துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இந்திய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களை பாராட்டி உரையாற்றினார்.
மேலும் ஆன்மிகத் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஷியாம், தனது அசாதாரண துணிச்சல், சிறந்த பேச்சாற்றல், படைப்பாற்றல், கல்வி, கலை மற்றும் நாடகத் துறைகளில் பெற்ற சாதனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனநல விழிப்புணர்வுக்கான சமூகத் திட்டங்களில் மேற்கொண்ட தொடர்ச்சியான மற்றும் தாக்கமிக்க பங்களிப்புகள் ஆகியவற்றிற்காக நடுவர்களால் பாராட்டப்பட்டு இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பதக்கம் மற்றும் வீரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, துணிவு, ஒற்றுமை, தியாகம் மற்றும் மனிதநேய மதிப்புகளை இளம் தலைமுறையினரிடம் விதைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
- ஷார்ஜாவிலிருந்து நமது வாசகர் அப்சல்
Advertisement

