/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை அன்னையர் தின ரத்ததான முகாம்
/
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை அன்னையர் தின ரத்ததான முகாம்
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை அன்னையர் தின ரத்ததான முகாம்
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை அன்னையர் தின ரத்ததான முகாம்
மே 14, 2024

துபாய் : இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு 55வது மாபெரும் இரத்ததான முகாம் அல்பராக மருத்துவமனையில் பேரவையின் அமீரக துணை தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.மீரான், தொழிலதிபர்கள் அபுதாகிர், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், ஜெஸீலா பானு, கிரீன் குலோபல் ஜாஸ்மீன், திமுகவின் முஸ்தபா, மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயதுல்லாஹ், லால்பேட்டை நசீர், அஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொன்டார்கள். நிகழ்வில் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் நாற்பதுக்கு மேற்பட்டோர் இரத்த தானம் செய்தார்கள். இரத்த தானம் செய்த சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement