sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

முதன் முறையாக ஜெத்தாவில் ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்

/

முதன் முறையாக ஜெத்தாவில் ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்

முதன் முறையாக ஜெத்தாவில் ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்

முதன் முறையாக ஜெத்தாவில் ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்


நவ 25, 2024

Google News

நவ 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 18 வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியா ஜெத்தாவில் 10 அணிகளின் உரிமையாளர்கள் ஒன்று கூடும் வீரர்களுக்கான மெகா ஏல நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படும் என்ற செய்தி வெளியான பிறகு, துபாய், லண்டன் மற்றும் சவுதி அரேபியாவின் பெயர்கள் பரிந்துரைக்கு வந்தாலும், இறுதியாக துறைமுக நகரமான ஜெத்தாவினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இறுதி செய்தது. ஜெத்தாவில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்.


ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்பு 2023 இல் துபாயில் நடைபெற்றது.


சவுதி அரேபியாவின் ஜெத்தா அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடந்த ஏலத்திற்கு 1500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர், இறுதி பட்டியல் 574 ஆக குறைக்கப்பட்டது.


முதல் நாளில், 10 அணிகளில் பின்வரும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


01 சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஆர். அஷ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர்.


02 மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர்.


03 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட்.


04 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி.


05 சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், இஷான் கிஷன், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வ டைடே, அபினவ் மனோகர்.


06 ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்க.


07 பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், நேஹால் வதேரா, ஹர்பிரீத் ப்ரார்.


08 டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், மிட்செல் ஸ்டார்க், கேஎல் ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டி. நடராஜன், கருண் நாயர், சமீர் ரிஸ்வி.


09 குஜராத் டைட்டன்ஸ்: ரஷீத் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக்கான், ககிசோ ரபாடா, ஜோஸ் பட்லர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர்.


10 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத்.


இந்திய மற்றும் சர்வதேச நட்சத்திரங்களின் பங்கேற்பு முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்ததால், முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.


தமிழர்கள் உட்பட ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டிருந்த ஏல நிகழ்ச்சி, சுவாரசியமான திருப்பங்களுடன் நிறைவடைந்தது.


-_ நமது செய்தியாளர் M Siraj



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us