
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன் : பஹ்ரைனின் இந்திய தூதரகம், பஹ்ரைன் கலாச்சாரம் மற்றும் தொல்பொருட்கள் ஆணையத்துடன் இணைந்து சிறப்பு யோகா நிகழ்ச்சியினை பஹ்ரைன் தேசிய அருங்காட்சியகத்தில் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் நாட்டினர் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் எளிய வகை ஆசனங்களை செய்ய அதனை பின்பற்றி யோகா பயிற்சி நடைபெற்றது. யோகாவை செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
நமது செய்தியாளர் காஹிலா
Advertisement