/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் பொதுமக்களின் கலாச்சார புகைப்படக் கண்காட்சி
/
துபாயில் பொதுமக்களின் கலாச்சார புகைப்படக் கண்காட்சி
துபாயில் பொதுமக்களின் கலாச்சார புகைப்படக் கண்காட்சி
துபாயில் பொதுமக்களின் கலாச்சார புகைப்படக் கண்காட்சி
நவ 26, 2024

துபாய் : துபாய் அல் மம்சார் பகுதியில் அமைந்துள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்கத்தில் அமீரகத்தின் 53வது தேசிய தினத்தையொட்டி பொதுமக்களின் கலாச்சாரம் தொடர்பான புகைப்படக் கண்காட்சி தொடங்கியது.
இந்த புகைப்படக் கண்காட்சியை சங்க தலைவர் பிலால் அல் பதூர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சௌதி அரேபியாவின் புகைப்பட கலைஞர் முஹம்மது முஹ்தசிப் எடுத்த புகைப்படங்கள் 60 க்கும் மேற்பட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் பொதுமக்களின் கலாச்சாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, குவைத், சௌதி அரேபியா, இந்தோனேசியா, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், கிர்ஜிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியை பொதுமக்கள் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை பார்வையிடலாம்.
நமது செய்தியாளர் காஹிலா
Advertisement