/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பயிற்சி மைய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி
/
ஜெத்தா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பயிற்சி மைய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி
ஜெத்தா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பயிற்சி மைய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி
ஜெத்தா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பயிற்சி மைய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி
பிப் 17, 2025

ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மேலும் ஒரு மைல்கல்லாக மாணவர்களுக்கான தமிழ்ப் பயிற்சி மையத்தின் பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஜெத்தா நோவல் பள்ளியின் முதல்வர் முகம்மது ஷபீக் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில், பதிவு செய்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஃபயாஸ் அஹமத் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நோவல் பள்ளியின் முதல்வருக்கு காஜா மைதீன், ஜெய்சங்கர் பூங்கொத்து வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்ச்சியில் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பயிற்சி மையத்தின், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குமான நெறிமுறைகளை பார்த்திபன் விளக்கி கூறினார். அதனைத் தொடர்ந்து, ஜெத்தா நோவல் பள்ளியின் முதல்வர் முகம்மது ஷபீக் வண்ண நாடா வெட்டி பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் இந்த பயிற்சி வகுப்புகளை பேராசிரியர் ஹேமா ராஜா, மருத்துவர் ஜெயஸ்ரீ மூர்த்தி, பேராசிரியர் தங்கம் மகேந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் சத்யா தங்கம் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். ஜெத்தா தமிழ்ச்சங்கம் எடுத்துக்கொண்ட இந்த முயற்சிக்கு மருத்துவர் கவிதா பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியாக மூர்த்தி நன்றி கூற, நிகழ்ச்சியை அம்மான் இனிதே தொகுத்து வழங்கி இருந்தார். சிராஜ், சிவகுமார் ஒருங்கிணைக்க, மேலும் ஜித்தா தமிழ்ச்சங்க மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பிரேம், செந்தில் ராஜா, ராமானுஜம் மற்றும் அனைவரது ஒத்துழைப்புடனும் விழா இனிதே நடைபெற்றது.
- நமது செய்தியாளர் M.Siraj
Advertisement