/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட் இந்திய பள்ளிக்கூட 32 வது ஆண்டு விழா
/
மஸ்கட் இந்திய பள்ளிக்கூட 32 வது ஆண்டு விழா
டிச 20, 2024

மஸ்கட்: மஸ்கட்டின் தர்சேட் இந்திய பள்ளிக்கூடத்தின் 32வது ஆண்டு விழா மிகவும் சிறப்புடன் நடந்தது. இந்த விழாவில் இந்திய தூதர் அமித் நாரங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் ஆண்டு விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பள்ளிக்கூட பருவம் மிகவும் முக்கியமானது. இந்த பருவத்தில் மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் இந்திய பள்ளிக்கூட நிர்வாகிகள், பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement