/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
/
குவைத்தில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
குவைத்தில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
குவைத்தில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
ஏப் 03, 2024

குவைத் : குவைத்தில் மாணவ, மாணவிகளுக்காக இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவைத் நாட்டில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரமலான் மாதத்தையொட்டி சிறப்பு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவைத் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
தொடக்கமாக உமைமா ஹாசிமி இறைவசனங்களை ஓதினார். இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பள்ளிக்கூட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மிகவும் இளம் வயதில் நோன்பை கடைப்பிடித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் அமைப்பு குறித்து ரஃபி அறிமுக உரை நிகழ்த்தினார். ரமலான் மாதத்தின் சிறப்புகள் குறித்து ஜவ்வாதும், இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது குறித்து வாசிப் ஹாசிமியும் உரை நிகழ்த்தினர். மேலும் வினாடி வினா போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடக்க உதவிய சமோலி பலாஹி, அமெர், சொயெப் கான், அகமது அலி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement