/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்
/
துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்
துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்
துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்
பிப் 03, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக வீரர் செய்யது அலி முதலிடம் பிடித்தார். துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் கிரீக் பகுதியில் ஓட்டப்பந்தயம் நடந்தது. இந்த போட்டி அரை மாரத்தான் மற்றும் பத்து கிலோ மீட்டர் பிரிவுகளில் நடந்தது. இதில் பத்து கிலோ மீட்டர் பிரிவில் 50 வயதுக்கும் மேற்பட்டோரில் செய்யது அலி முதலிடம் பிடித்தார்.
நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் தமிழக வீரர் செய்யது அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement