/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் தமிழக சமூக ஆர்வலருக்கு விருது
/
பஹ்ரைனில் தமிழக சமூக ஆர்வலருக்கு விருது
செப் 01, 2024

பஹ்ரைன் : பஹ்ரைன் நாட்டில் சிறப்புற சமூக சேவையாற்றி வரும் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் நிறுவனர் சையத் ஹனீஃப் பஹ்ரைன் மீடியா சிட்டியின் (பிஎம்சி) உயர் விருது பெற்றார்.
பஹ்ரைன் மீடியா சிட்டியின் (பிஎம்சி) உயர் விருதினை தன்னலமற்ற சமூக சேவைக்காக, செகயாவில் உள்ள பி எம் சி ஆடிட்டோரியத்தில் நடந்த ஓணம் பண்டிகையின் ஒரு மாத கால தொடர் நிகழ்ச்சிகளிள் துவக்க விழாவில் பெற்றுக்கொண்டார்.
பஹ்ரைன் நாடாளுமன்ற நீண்ட கால உறுப்பினர் டாக்டர். ஹசன் ஈத் புஹம்மாஸ், பிரான்சிஸ் கைதாரத் சிஎம்டி-ஐஎம்ஏசி குரூப் ஆஃப் கம்பெனிகள், இந்திய பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் பினு மன்னில், மற்றும் விருது பெற்றவர்கள், ஓணம் பண்டிகை விழாக் குழுவினர் மற்றும் அழைப்பாளர்களும் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement